2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஒரேன்ஜின் புதிய படைப்பான டெரா பிரிக்ஸ்

A.P.Mathan   / 2014 ஜூலை 02 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


அண்மையில் இடம்பெற்ற Construction Expo 2014 கண்காட்சியின் போது ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்தினால் டெரா பிரிக்ஸ் என்ற புதிய படைப்பை அறிமுகம் செய்தது.
 
நூற்றுக்கு நூறு வீதம் சுற்றாடலுக்கு தீங்கை ஏற்படுத்தாத உற்பத்தியான டெரா பிரிக்ஸ் நிர்மானத் துறையில் நூற்றுக்கு முப்பது வீதமான செலவீனங்களை குறைக்குமென நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய படைப்பை அறிமுகம் செய்து வைத்து உரையாற்றிய ஒரேன்ஜ் இலெக்ரிக் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சுஹாட் அமிட் கருத்து தெரிவிக்கையில், நூற்றுக்கு தொன்னூறு வீதமான ஈரமான மண் அடங்கிய டெரா பிரிக்ஸ், பொட்டியோ அல்லது சீமேந்தையோ கொண்டு சுண்ணச்சாந்து (Plastered) செய்யாது நேரடியாக வண்ணம் பூசலாம்.
 
டேரா பிரிக்ஸை பயன்படுத்துவதன் வாயிலாக குறைந்த செலவில், துரிதமாக மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த கட்டடத்தை அமைக்கக் கூடிய வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X