.JPG)
உலக சுகாதார தாபனத்தின் மூலம் 11 ஆவது சர்வதேச இரத்த தான தினத்தை அனுஷ்டிப்பதற்காக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் தேசிய இரத்த மாற்றீட்டு செயற்பாடுகளின் (NBTS) வெற்றிகரமான செயற்பாடுகளை கௌரவிக்கும் வகையில் இந்த தெரிவு அமைந்திருந்தது. 2004 ஆம் ஆண்டு முதல் உலக சுகாதார தாபனம் இந்த சர்வதேச நிகழ்வை முன்னெடுப்பதற்காக வெவ்வேறு நாடுகளை அவற்றின் தரம் மற்றும் மாற்றீட்டு சேவை ஆகியவற்றுக்கமைவாக தெரிவு செய்திருந்தது.
இவற்றில் தென் ஆபிரிக்கா, பிரித்தானியா, தாய்லாந்து, கனடா, துபாய், அவுஸ்திரேலியா, ஸ்பெய்ன், ஆர்ஜென்டீனா மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளடங்கியிருந்தன. உலக சுகாதார தாபனம் தனது அங்கத்துவ நாடுகளில் பாதுகாப்பான குருதி சேகரிப்பு கட்டமைப்பை 100 வீதம் தன்னார்வ கொடையாளர்களிடமிருந்து சேகரிக்க ஊக்குவிக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இலங்கை 100 வீதம் எனும் இலக்கை எய்தியிருந்தது, இதனைத்தொடர்ந்து ஃபிரான்சில் WBDD நிகழ்வை 2014 ஆம் ஆண்டில் முன்னெடுக்க இலங்கை உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார தாபனம் அறிவித்திருந்தது. 'தாய்மாரை பாதுகாப்பதற்கு பாதுகாப்பான குருதி' எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இலங்கையில் முன்னெடுக்கபடுகிறது. 100,000 பிறப்புகளில் 37 இறப்புகள் பதிவாகியிருக்க வேண்டிய நிலையில், இலங்கையில் இந்த எண்ணிக்கை 100,000 க்கு 240 ஆக அமைந்துள்ளது. எனவே இந்த தொனிப்பொருள் இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. அத்துடன், இலங்கை அரசாங்கமும் சர்வதேச இரத்த தான வாரமாக ஜுன் மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பிரகடனம் செய்திருந்தது.
சர்வதேச இரத்த தான தினத்தையும், பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் 18 ஆவது வருட பூர்த்தியையும் குறிக்கும் வகையில், நிறுவனத்தின் விளையாட்டு மற்றும் நலன்புரிச்சங்கத்தின் மூலம் நாடு முழுவதும் பரந்த குருதி விநியோக செயற்திட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பு, கண்டி, அநுராதபுரம், பண்டாரவளை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கி, பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் இணைந்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த இரத்த தான செயற்திட்டத்தின் தொனிப்பொருளாக 'ஒரு துளி குருதியை தானம் செய்து உயிரைக் காப்பாற்றுங்கள்' என்பதாக அமைந்திருந்தது. ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் முன்வந்து தமது பெறுமதி வாய்ந்த குருதியை இந்த திட்டத்துக்காக தனாம் செய்திருந்தனர். நாடு முழுவதும் மொத்தமாக 600 பைன்ட்கள் குருதி சேகரிக்கப்பட்டிருந்ததுடன், இந்த பங்களிப்பு என்பது இலங்கையின் தேசிய குருதி மாற்றீட்டு சேவையின் வரவேற்பை பெற்றிருந்தது.
இலங்கையில் இரத்த தானம் செய்வதற்காக உயர் நுட்பமான முறைகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இவற்றின் மூலம் எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, மலேரியா மற்றும் சைஃபில்ஸ் போன்றன குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னரே மாற்றீட்டு நிலையத்துக்கு வழங்கப்படுவதாக தேசிய குருதி மாற்றீட்டு சேவையின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த புனிதகரமான செயற்பாட்டுக்கு தமது பங்களிப்பை வழங்கிய அனைவருக்கும் பீபிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் கம்பனி தனது நன்றிகளை தெரிவித்திருந்தது.
.JPG)