.jpg)
2014.07.11ஆம் திகதி இலங்கையின் முதற்தர மூலிகை அழகுசாதன உற்பத்தி நிறுவனமான நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ், வர்த்தக நடவடிக்கைகளுக்கு அப்பால் பல்வேறு சமூக மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி, நாட்டின் அபிவிருத்திக்கும் தமது பங்களிப்பை வழங்குகின்றது. இளைஞர் யுவதிகள் தமது திறமைகளை வெளிக்காட்டுவதற்கு மேற்கொள்ளப்படும் பல்வேறு செயற்திட்டங்களுக்கு நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றமை விசேட அம்சமாகும்.
அதன்படி, இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை நாடு முழுவதிலும் நடத்தி வரும் அழகுக்கலை பாடநெறிகளின் செய்முறைப் பயிற்சிகளுக்குத் தேவையான அழகுசாதனப் பொருட்களை நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனமே கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றது. ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தமது திறன்களை மேம்படுத்தி, நிபுணத்துவம் மிக்கவர்களாக வியாபார உலகில் கால்பதிப்பதற்கு நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனமும், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையும் உதவிகளை வழங்கியுள்ளன.
இச்சமூக மேம்பாட்டு திட்டத்தை தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் முன்னெடுப்பதற்கு இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையும் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனமும் இம்முறையும் கைகோர்த்துள்ளன. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அன்மையில் நாராஹேன்பிட்டியவிலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அலுவலகத்தில் அதன் தலைவர் கேர்ணல்.எஸ்.ஆர்.பீ.ரத்நாயக்க (RWP,RSP) நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவர்ஃமுகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த குமாரசிங்க ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
தேசத்தின் மேம்பாட்டுக்காக இத்தயை சமூக சேவைககளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அனைத்து உள்ளுர் நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என்பதை உறுதியாக நம்பும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம், 'இலங்கையர்களால் சாதிக்க முடியும்' என்ற கூற்றினை நிறைவேற்றிக் காட்டியுள்ளது. 2020 ஆம் ஆண்டு இலங்கையில் தயாரிக்கப்படும் சர்வதேச இயற்கை அழகுசாதன வியாபார நாமமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்வதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும். அதற்கமைய இலங்கையின் முதல்தர மூலிகை அழகுசாதனப் பொருட்களை தயாரிக்கும் நேச்சர்ஸ் சீக்ரெட்ஸ் நிறுவனம் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் தம்மைப் ஏற்கனவே பதிவு செய்துள்ளது.
ஐரோப்பாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட GMP மற்றும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ISO 9001 மற்றும் ISO 14001 ஆகிய தரச்சான்றிதழின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் நிறுவனம் உற்பத்திகளை மேற்கொள்கின்றது. நவீன தொழில்நுட்பத்துடன்கூடிய தொழிற்சாலையில் தமது உற்பத்திகளை மேற்கொள்கின்ற இந் நிறுவனம் தொழிற்சாலையைச் சூழ 500 இற்கும் அதிகமான அரிய வகை மூலிகைச் செடிகளைக் கொண்ட மூலிகைப் பூங்கா ஒன்றையும் தன்னகத்தே கொண்டுள்ளது. தமது ஆராய்ச்சிகளுக்காக ஆய்வு நிலையமொன்றை கொண்டுள்ள ஒரே ஒரு தனியார் நிறுவனமாகவும் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன் விளங்குகின்றது. ஆரிய வகை செடிகளை அவற்றின் களங்களின் மூலம் விருத்தி செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இதன் மூலம் நமது அடுத்த தலைமுறையினருக்கும் அரிய மூலிகைச் செடிகளைப் பாதுகாத்துக் கொடுக்கக்கூடியதாக இருக்கும். இதற்காக தாவரக் களங்களை விருத்தி செய்யும் ஆய்வுகூடமொன்றையும் நேச்சர்ஸ் சீக்ரட்ஸ் நிறுவனம் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
.jpg)