
2014 ஜூன் 09ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் செலான் வங்கியின் ஒரு பணிப்பாளராக உபாலி தர்மதாச நியமிக்கப்பட்டுள்ளதாக செலான் வங்கி பி.எல்.சி. அறிவித்துள்ளது.
உபாலி தர்மதாச ஒரு மிகவுயர்ந்த தொழிலதிபராவார். உறுதியான தலைமைத்துவ தராதரங்கள், நிரூபிக்கப்பட்ட உபாயம் வகுக்கும் ஆற்றல்கள் என்பவற்றுடன் வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் என அனைத்து விடயங்களிலும் உள்ளார்ந்த மற்றும் தொடர்ச்சியான ஆர்வத்தை இவர் கொண்டுள்ளார். கூட்டாண்மை முகாமைத்துவத்தில் 32 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தை இவர் தன்னகத்தே கொண்டுள்ளார்.
உபாலி தர்மதாச நவலோக குழுமக் கம்பனிகளின் முகாமைத்துவ பணிப்பாளராக திகழ்கின்றார். இக்குழுமத்தின் கீழ் நலலோக பிலிங் (பிரைவேட்) லிமிட்டெட், நவலோக டிம்பர் ஸ்டோர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், நவலோக பொலிசக்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட், நவலோக இன்டஸ்ரிஸ் (பிரைவேட்) லிமிட்டெட், நியு நவலோக ரேடிங் கொம்பனி (பிரைவேட்) லிமிட்டெட், நவலோக டிவலொப்மென்ற்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் மற்றும் நவலோக ரெஸ்டூரன்ட் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்கள் செயற்படுகின்றன.
ராஜதந்திர துறையைப் பொறுத்தமட்டில் மெரோக்கோ இராச்சியத்திற்கான இலங்கையில் உள்ள கௌரவ 'கன்சியுல் ஜெனரலாக' இவர் கடமையாற்றுகின்றார். திரு. உபாலி தர்மதாச தற்போது வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக பதவி வகிக்கின்றார். அத்துடன் இலங்கை மர வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவராகவும் இவர் பதவி வகிக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட்டில் நிர்வாக மட்டத்திலான இவரது பங்குபற்றுதல் 1989ஆம் ஆண்டு ஆரம்பமாகியது. இவர் பிரதித் தலைவராகவும் அதனைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை என பின்னர் அறியப்பட்ட BCCSLஇன் தலைவராகவும் இவர் பதவி வகித்தார். அதன் பின்னர், முன்னாள் இடைக்கால தெரிவுக்குழுவின் தலைவராகவும் இலங்கை கிரிக்கெட்டின் தலைவராகவும் கடமையாற்றிய இவர், இலங்கை கிரிக்கெட்டின் இதற்கு முன்னர் கடைசியாக பதவிவகித்த தலைவராக திகழ்கின்றார்.
அதேவேளை, கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவராகவும் இவர் கடமையாற்றுகின்றார். ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரான திரு. உபாலி தர்மதாச, தனது உயர் கல்வியை ஐக்கிய இராச்சியத்திலுள்ள வொன்ட்வோர்த் தொழில்நுட்ப கல்லூரில் பூர்த்தி செய்தார்.