2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஜனசக்தியின் ஆயுள் காப்புறுதி நிலையம்

A.P.Mathan   / 2014 ஜூலை 29 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனம் அதன் 20 ஆவது ஆண்டுப் பூர்த்தி கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாக, ஜுன் மாதம் 3ஆம் திகதி இல. 144, காலி வீதி, கொழும்பு 03 எனும் முகவரியில் புதிய ஆயுள் காப்புறுதி நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த ஆயுள் காப்புறுதி நிலையத்தின் மூலம் அனைத்து ஜனசக்தி ஆயுள் காப்புறுதி வாடிக்கையாளருக்கும் சேவைகள் வழங்கப்படவுள்ளன. 
 
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனசக்தி காப்புறுதியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் மற்றும் கௌரவ விருந்தினராக பணிப்பாளரும்ஃபிரதி பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜுட் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். 
 
மேலும் இந்த விசேட நிகழ்வில் ஜனசக்தி பிரிவுகளின் அனைத்து தலைவர்களும், ஆயுள் காப்புறுதி பிரிவின் முக்கிய ஊழியர்கள் பலரும் பங்குபற்றியிருந்தனர். அதே சமயம், இந் நிகழ்வில் ஆயுள் காப்புறுதி பிரிவுக்கான புதிய கொள்கைகள் வெளியிடப்பட்டன.
 
இந் நிகழ்வில் ஆயுள்(விற்பனை மற்றும் செயற்பாடுகள்) பிரிவின் பொது முகாமையாளர் ஹஷ்ர வீரவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இந்த புதிய ஆயுள் காப்புறுதி நிலையத்தை ஆரம்பித்ததன் மூலம் துறையில் முன்மாதிரியாக திகழும் 'ஜனசக்தி லைஃவ் அன்லிமிடட்', 'ஜீவித வர்தன' மற்றும் 'லைஃவ் சேவர்' ஆகிய ஜனசக்தியின் புதிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்ட எண்ணியுள்ளோம். இதுவரை இடம்பெறாத வர்த்தக அறிமுகத்தோடு இன்று தொழிற்துறை சேர்ந்த 150 காப்புறுதி விற்பனை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆயுள் காப்புறுதி நிலையத்தை அமைப்பதில் பிரதான கருவியாக செயற்பட்ட எமது ஆயுள் விற்பனை பிரிவின்(கூட்டாண்மை விற்பனை மற்றும் கொள்கை அபிவிருத்தி) உதவி பொது முகாமையாளர் நிலங்க கருணாரத்னவின் அர்ப்பணிப்பு காரணமாகவே இது சாத்தியமானது' என்றார். 'மேலும் எமது மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரான ஹேமகுமார திசாநாயக்க, இன்று எம்மோடு ஆயுள் விற்பனை பிரிவின்(புதிய செனல் அபிவிருத்தி மற்றும் ஆட்சேர்ப்பு முகாமைத்துவம்) பொது முகாமையாளராக இணைந்து கொண்டுள்ளதுடன், புதிய ஆயுள் வலையமைப்பு மற்றும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்குமான ஒட்டுமொத்த ஆட்சேர்ப்பு மேலாண்மை செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளார்' என மேலும் அவர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X