2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் அதிகளவு மதிப்பை பெற்ற நிறுவனமாக ஜோன் கீல்ஸ்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னணி ஆங்கில மொழி சஞ்சிகையான LMD மூலம் வருடாந்தம் முன்னெடுக்கப்படும் இலங்கையின் அதிகளவு மதிப்பை பெற்ற நிறுவனங்கள் தரவரிசைப்படுத்தலில் ஒன்பதாவது தடவையாக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் முதலிடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே கொமர்ஷல் வங்கி மற்றும் MAS ஆகிய நிறுவனங்கள் பெற்றுக் கொண்டுள்ளன. 
 
முன்னணி ஆய்வு நிறுவனமான நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்த தரப்படுத்தலின் அடிப்படையில் இந்த ஆண்டுக்கான நிறுவனங்களின் வரிசை வெளியிடப்பட்டுள்ளது. 100 நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றில் பணியாற்றும் 800 ஊழியர்களிடமிருந்து கருத்துக்கணிப்புகள் முன்னெடுக்கப்பட்டு இந்த தரப்படுத்தலில் பயன்படுத்தப்பட்டிருந்தன.
 
பத்தாம் ஆண்டு தரப்படுத்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தமையின் காரணமாக, இந்த ஆண்டு தரப்படுத்தலின் போது ஒலிம்பிக் பதக்கம் அடிப்படையில் நிறுவனங்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X