2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொள்முதல் செயற்பாட்டை மாற்றியுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 22 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசத்தின் விருதை வென்ற விமான சேவை வழங்குநரான ஸ்ரீலங்கன் விமான சேவை, வெற்றிகரமான முறையில் ஒரக்கள் iProcurement கட்டமைப்பை நிறுவியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களுக்கு பணிப்புரைகளை வழங்குவது மற்றும் நிறுவனம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரேவிதமான கொள்வனவு முறையை அமுல்படுத்துவதன் மூலம் மேலதிகமாக ஏற்படும் கொள்முதல் செலவீனத்தை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது. 
 
Oracle E-Business Suite R12 இன் Oracle iProcurement ஐ நிறுவும் முன்னர் நிறுவனத்தின் வெவ்வேறு திணைக்களங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகள் மனித செயற்பாட்டின் மூலம் கையாளப்பட்டிருந்தன. இதன் காரணமாக செயற்பாடுகள் மிகவும் சிக்கலான முறையில் அமைந்திருந்தன. 
 
இந்த புதிய கட்டமைப்பை நிறுவியுள்ளதன் மூலம் நிறுவனத்தின் கொள்முதல் செயற்பாடு என்பது துரிதமாக்கப்பட்டு, உற்பத்தி திறனில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், செலவீனத்தையும் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. 
 
ஸ்ரீலங்கன் விமான சேவையின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் தலைமை அதிகாரி சாமர பெரேரா கருத்து தெரிவிக்கையில், 'ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதான தொழில்நுட்ப சேவை வழங்குநர் எனும் வகையில் ஒரக்கள், பல ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது. இதன் காரணமாக காலாகாலமாக எமது வர்த்தக செயற்பாடுகளை மீளமைப்பு செய்து கொள்ளவும் உதவியாக அமைந்திருந்தது. வௌ;வேறு திணைக்களங்களிடையே ஒரக்கள் iProcurement கட்டமைப்பை நிறுவியுள்ளதன் மூலம், எமது வணிக பாவனையாளர்களுக்கு தமது வர்த்தக செயற்பாடுகளை சிக்கனமான முறையில் முன்னெடுக்க உதவியுள்ளதுடன், அநாவசிய செலவீனத்தையும் குறைத்துக் கொள்ள உதவியுள்ளது' என்றார்.
 
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வழங்கியிருந்த சேவைகள் குறித்து ஒரக்கள் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஆப்ளிகேஷன் வணிகத்தின் பணிப்பாளர் சந்தித சமரநாயக்க கருத்து தெரிவிக்கையில், 'ஒரக்கள் E-Business Suite இனை பயன்படுத்துவதன் மூலம், வர்த்தகத்தின் வௌ;வேறு பிரிவுகளில் சாமர்த்தியமான தீர்மானங்களை மேற்கொள்ளக்கூடியதாகவிருக்கும். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கும் இந்த தீர்வை பயன்படுத்தி தமது சகல திணைக்களங்களுக்கிடையிலான செயற்பாடுகளை நியம கட்டுப்பாட்டினுள் கொண்டுவர முடியும். மனித செயற்பாட்டின் மூலம் கொள்முதல் கோரிக்கைகளை ஊழியர்கள் பதிவு செய்வதை குறைத்து, விநியோகத்தர் உறவுகள் மற்றும் கொள்கை அடிப்படையிலான வளங்களை கையாள்வது போன்ற செயற்பாடுகளில் தமது கவனத்தை ஊழியர்கள் செலுத்த முடியும்' என்றார். 
 
2013 செப்டெம்பர் மாதத்தில் ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் உடனான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்; இந்த தீர்வு முழுமையான அமுல்படுத்தப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X