2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நகர்ப்புற மக்களுக்கு புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள சதாஹரித பிளாண்டேஷன்

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

வணிக ரீதியான வனவளர்ப்புக்கான ISO சான்றிதழையும், உள்நாட்டில் அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான Patent சான்றிதழையும் கொண்டுள்ள பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனமான சதாஹரித பிளாண்டேஷன் ஆனது, நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அகர்வுட் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் இரு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. சதாஹரித நிறுவனம், நாட்டு மக்களின் நிதி மற்றும் சமூக தேவைகளை கருத்தில் கொண்டே இந்த முதலீட்டு திட்டங்களை உருவாக்கியுள்ளது.
 
பசுமை மற்றும் சூழல் நட்புறவான பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கையில், சர்வதேச அளவில் வணிக ரீதியான வனவளர்ப்புக்கான கேள்வி என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இந்த கேள்வியை நிறைவேற்றி அதன் அனுகூலங்களை பெறும் நோக்கில், சதாஹரித மூலம் இலங்கை மக்களுக்கு அகர்வுட் செய்கை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 
 
சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனத்தின் கன்றுகள் வளர்ப்பு பண்ணை மூலம் சொந்தமாக வீட்டுத்தோட்டத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டும் நகர்ப்புற வாசிகளுக்கு வழங்கும் குறிக்கோளுடன் எகியுலேரியா மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் வெற்றி மற்றும் பாதுகாப்பு காரணமாக சிறிய நிலப்பரப்பை கொண்ட நகர்ப்புற மக்களின் கேள்வியை கருத்தில் கொண்டு சதாஹரித நிறுவனமானது இந்த முதலீட்டு திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தது. 
 
புதிய அகர்வுட் முதலீட்டு திட்டங்களுக்கமைய, சதாஹரித நிறுவனமானது தமக்கு சொந்தமான நிலங்களில் முதலீடு செய்வதற்கான தெரிவினை குறித்த முதலீட்டாளர்களுக்கு வழங்குகிறது. முதலாவது முதலீட்டு திட்டத்தின் கீழ் ஒரு கன்றுக்கு ரூ.9792 வீதம் குறைந்தபட்சம் 25 அகர்வுட் கன்றுகளுக்கு 244,800 ரூபாவினை முதலீடு செய்தல் வேண்டும்.
 
இத் திட்டத்தின் முதிர்ச்சிகாலம் எட்டு ஆண்டுகளாகும். இத் திட்டத்தின் ஊடாக ஒரு கன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 மீள கையளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அகர்வுட் தொடர்பான கேள்வி காரணமாக, முதலீட்டாளர்கள் ஒரு செடிக்கு 50,000 ரூபாவினை சம்பாதித்துக்கொள்ள முடியும். இதற்கமைய 25 மரங்களுக்கான வருவாய் 1,250,000 ரூபாவாகும். இதற்கு மேலதிகமாக, ஒரே தடவையில் முதலீட்டு தொகையை செலுத்த முடியாத குறித்த முதலீட்டாளர்களுக்காக 12 மாத தவணைக்கொடுப்பனவில் முதலீட்டினை மேற்கொள்வதற்கான வசதியை சதாஹரித வழங்கியுள்ளது.
 
8 வருடங்களுக்கு முன்னரே அனுகூலங்களை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்காக சதாஹரித நிறுவனம் மூலம் இரண்டாவது முதலீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு மரத்திற்கு 12,500 ரூபா படி 20 செடிகளுக்கு 250,000 ரூபாவினை எட்டு ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் ஒரு கன்றுக்கு 25,000ரூபா படி மொத்தமாக 500,000 ரூபா வருவாயினை ஈட்டிக்கொள்ளலாம். எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் கிடைக்கும் வருவாயை தவிர்ந்து 250,000 ரூபா முதலீட்டிற்கு மாதாந்தம் 7% மும், வருடாந்த எனில் 8மூ மும் பணமாக வழங்கப்படுகிறது. இத் திட்டம் குறித்து நிறுவனம் தெரிவிக்கையில், 250,000 ரூபா முதலீடு செய்து 8 ஆண்டுகளுக்கு முதலீட்டினை மேற்கொள்ளும் குறித்த முதலீட்டாளர்கள் மாதாந்தம் அல்லது வருடாந்தம் வருவாயை பெற முடியும்.
 
இதற்கு மேலதிகமாக, அகர்வுட் விதைகளின் இறக்குமதி முதல் திட்டத்தின் முதிர்வுக்காலம் வரை முன்னெடுக்கப்படும் அனைத்து செயற்பாடுகளும் சட்ட முறைப்படி மேற்கொள்ளப்படுவதனால் மிகவும் பாதுகாப்பாகவும், நம்பக்கத்தன்மை உடையதாகவும் காணப்படுகிறது. அகர்வுட் தொழில்நுட்பத்திற்கான Patent சான்றிதழைக் கொண்ட இலங்கையிலுள்ள ஒரேயொரு நிறுவனம் சதாஹரித ஆகும். இந் நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட அகர்வுட் வீட்டுத்தோட்ட செய்கையை கிராமிய மற்றும் நகர்ப்புற மக்கள் வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதுடன், ஒரே தடவையில் பாரிய தொகையினை முதலீடு செய்ய முடியாத விவசாய பெருமக்கள் சிறிய முதல் பாரியளவிலான வர்த்தகம் வரை இச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X