.jpg)
மூன்று ஆண்டுகளில் உயர் பெறுமதியை இவ்வாரம் பதிவு செய்திருந்த கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள், மீண்டும் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. குட் ஹோப், ஆசிரி சென்ரல் ஹொஸ்பிட்டல் மற்றும் லாஃவ்ஸ் காஸ் ஆகிய பங்குகளின் மீது விலை சரிவுகள் காரணமாக சுட்டிகள் மறை பெறுமதியில ;நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 742 மில்லியன் ரூபாவை எய்தியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது செலான் டிவலப்மன்ட்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. தப்ரோபேன் ஹோல்டிங்ஸ் மற்றும் லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் வொரன்ட்கள் 0006 ஆகியவற்றின் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் குறைந்தளவில் பதிவாகியிருந்தன.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்களிப்புடன்) துறை சுட்டெண் 0.37 வீத சரிவை பதிவு செய்திருந்தது. ஃபர்ஸ்ட் கெப்பிட்டல் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.40 ரூபாவால் (1.23மூ) அதிகரித்து 33.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
பன்முகத்துறை என்பது சந்தைப்புரள்வு பெறுமதியில் அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் தப்ரோபேன் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன்) இந்த துறையின் சுட்டெண் 0.34 வீத உயர்வை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 4.00 ரூபாவால் (1.65மூ) அதிகரித்து 246.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. தப்ரோபேன் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் (6.25மூ) அதிகரித்து 5.10 ரூபாவாக பதிவாகியிருந்தது.
செலான் டிவலப்மன்ட்ஸ் மற்றும் லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் வொரன்ட்கள்0006 ஆகியனவும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. செலான் டிவலப்மன்ட்ஸ் பங்கொன்றின் விலை மாற்றமின்றி 14.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. லங்கா சென்ச்சரி இன்வெஸ்ட்மன்ட்ஸ் வொரன்ட்கள்0006 ஒன்றின் விலை 0.30 ரூபாவால் அதிகரித்து 33.00 ரூபாவாக பதிவாகியிருந்தது.
இதேவேளை. ஹிக்கடுவ பீச் ரிசோர்ட் தனது முதலாவதும் இறுதியானதும் பங்கிலாபத்தை பங்கொன்றுக்கு 0.12 ரூபா வீதம் அறிவித்திருந்தன.