2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் போதே இலக்கை அடைய முடியும்'

Kogilavani   / 2014 செப்டெம்பர் 01 , மு.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


'அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பாங்குடனும் சேவையாற்றும் போதே குறித்த இலக்கை அடைய முடியும்' என ஓய்வு பெற்றுச் சென்ற முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் ஏ.எம்.நஸீர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மக்கள் வங்கிக் கிளையின் ஊழியர் நலன் புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று மக்கள் வங்கிக் கிளையின் முன்னாள் முகாமையாளர் நஸீரைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (31) அக்கரைப்பற்றில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.

நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் பிரதி முகாமையாளருமான ஏ.ஜி. நிஸாம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், அம்பாறை மாவட்ட பிராந்திய முகாமையாளர் எஸ்.சோமசுந்தர, உதவி பிராந்திய முகாமையாளர்களான ஏ.சம்சுடீன், கபில திஸாநாயக்க மற்றும் வங்கி முகாமையாளர் எஸ்.எம்.இமாமுதீன் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

'ஒரு நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் அவர்களுக்கு கிடைக்கின்ற உரிமைகள் மற்றும் சலுகைகளை அனைவரும் ஒரேநேரத்தில் பெற்றுக் கொள்வதற்கு முயலக்கூடாது. விடுமுறை இருக்கின்றது என்பதற்காக அனைத்து ஊழியர்களும் ஒரே நாளில் பெற்றுக்கொள்ள முடியாது.

அவ்வாறு நடந்து கொள்வதை ஒரு நிறுவனத்தின் தலைவர் என்ற வகையில் பார்த்துக் கொண்டு இருக்கவும் முடியாது. இதுபோன்ற சந்தாப்பங்களை ஊழியர்கள் ஏற்படுத்தாது நல்ல மனப்பாங்குடன் வினைத்திறன் மிக்க தொழில் நிறுவனமாக கொண்டு செல்வதற்கு திடசங்கற்பம் பூணவேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X