2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

லங்காசோய் கேம் ஷோ நிகழ்ச்சியின் மாபெரும் பணப்பரிசில்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 04 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்நாட்டு சோயா உற்பத்தியில் முதன்மை வர்த்தகநாமமாக விளங்கும் லங்காசோய் மூலம் முன்னெடுக்கப்படும் 'லங்காசோய் கேம் ஷோ' நிகழ்ச்சியில் இதுவரை வெல்லப்படாத மாபெரும் பணப்பரிசில் வெல்லப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெற்ற உடுபத்தாவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட லேகானி ரேணுகாவிற்குரிய பணப்பரிசிலை கையளிக்கும் நிகழ்வு இரத்தமலானையில் அமைந்துள்ள கன்வீனியன்ஸ் ஃபூட்ஸ் லங்கா நிறுவனத்தின் பிரதான காரியாலயத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் திலங்க டி சொய்சாவின் தலைமையின் கீழ் இடம்பெற்றது.
 
லங்காசோய் அனுசரணையுடன் 11 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் இந் நிகழ்ச்சி இதுவரை 530க்கும் மேற்பட்ட பாகங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்ச்சியானது புகழ்பெற்ற கலைஞரும், மெரியன்ஸ் இசை குழுவை சேர்ந்த நலின் பெரேரா மற்றும் பிரபல சமையற்கலை வல்லுநர் அருண பெர்னாண்டோ இணைந்து வழங்குகின்றனர்.
 
லங்காசோய் வெற்றுப்பக்கற் 03 உடன் அழகிய கலைப்படைப்பு ஒன்றினை அனுப்பி வைப்பதனூடாக வாடிக்கையாளர்கள் இந் நிகழ்ச்சியுடன் இணைந்து கொள்ள முடியும். மிக அழகிய கலைப் படைப்பை அனுப்புபவருக்கு லங்காசோய் கேம் ஷோவில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
 
இந் நிகழ்ச்சியில் இணைந்து கொள்ளும் வாடிக்கையாளருக்கு போட்டியில் கலந்து கொண்டு பணப்பரிசில்களை வெல்ல முடியும். இதுவரை ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுள் அதிகூடிய பணப்பரிசிலை 528ஆவது நிகழ்ச்சியில் பங்கேற்ற லேகானி ரேணுகா வென்றெடுத்தார். இப் போட்டியில் அவர் 146,500 ரூபா பணப்பரிசிலை வென்றார்.
 
தனது வெற்றி குறித்து அவர் கூறியதாவது, 'லங்காசோய் கேம் ஷோ, எனக்கு பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். அதில் பங்குபற்ற வாய்ப்பு கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இதில் மாபெரும் பணப்பரிசிலை வென்றமை மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. இப் பணத்தினைக் கொண்டு ஆடை தொழிலொன்றை தொடங்க எண்ணியுள்ளேன்' என தெரிவித்தார்.
 
இந் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே கிரியேட்டிவ் தயாரிப்பாளராக இருந்த தேஜா இந்தமல்கொட கருத்து தெரிவிக்கையில், 'லங்காசோய் கேம் ஷோ என்பது வெறுமனே பொழுதுபோக்கு சார்ந்த நிகழ்ச்சியல்ல. இதனூடாக பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் சமையல் அறிவினை மேம்படுத்துவது குறிக்கோளாக அமைந்துள்ளது. விசேடமாக வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் அழைப்பு மற்றும் கலை படைப்புகள் ஊடாக இந்த நிகழ்ச்சி மீதான அவர்களின் ஆர்வத்தை அறிய முடிந்துள்ளது' என தெரிவித்தார்.
 
CBL நிறுவனத்தின் துணை நிறுவனமான கன்வீனியன்ஸ் ஃபுட் லங்கா நிறுவனத்தின் முன்னணி வர்த்தகநாமமான லங்காசோய் இந்நாட்டு சோயா உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது.  முதற்தடவையாக சோயா உற்பத்திகள் அறிமுகம் செய்தல் மற்றும் அதனூடாக பல்வேறு சுவைகளை அறிமுகம் செய்ய லங்காசோயினால் முடிந்துள்ளது. முதன் முறையாக மாலு சோய், சிக்கோ சோய் மற்றும் வெஜி சோய் போன்ற வௌ;வேறு சுவை கொண்ட சோயா மீட்டினை வாடிக்கையாளருக்கு வழங்க லங்காசோய் இனால் முடிந்துள்ளது. 
 
தொடர்ச்சியான ஆராய்ச்சிகளின் மூலம் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய தயாரிப்பினை அறிமுகம் செய்து பரபரப்பான வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்ககூடிய வகையில் சோயா மீட் உலகில் புரட்சியை ஏற்படுத்தி லங்கா சோய் Pack to Pan எனும் பெயரில் நவீன உற்பத்தி வரிசைகளை அறிமுகம் செய்வதற்கு கன்வீனியன்ஸ் ஃபூட் லங்கா நிறுவனத்தினால் முடிந்துள்ளது.
 
'CBL நிறுவனமானது எந்நேரமும் வாடிக்கையாளர்களின் தேவைகளை இனங்கண்டு அவர்களின் தேவைகளுக்கு பொருத்தமான நவீன உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. வாடிக்கையாளருக்கு தரமான ஆகாரங்களை வழங்குவதுடன், கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிறைந்த நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழச்சியடைகின்றோம்' என குழும பணிப்பாளரும், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார்.
 
இந்நாட்டு சோயா உற்பத்தியில் புத்துருவாக்கங்களை உருவாக்கிய லங்காசோய் கடந்த SLIM சிறந்த வர்த்தகநாமங்கள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமத்திற்கான தங்க விருதினை வென்றது. இலங்கையில் முதற்தடவையாக சோயா உற்பத்திக்காக SLS தரச்சான்றிதழை பெற்ற முதல் வர்த்தகநாமமாக லங்காசோய் விளங்குகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X