
உறுதியான விநியோகத்தர் வலையமைப்பை கொண்டுள்ள றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி, முழு நாட்டுக்கும் டயர்களை விநியோகிக்கக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது. கம்பனியின் 1500க்கும் மேற்பட்ட உறுதியான விற்பனை முகவர்களிலிருந்து சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்திருந்தவர்கள் தெரிவு செய்யப்பட்டு, வஸ்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இந்த முகவர்கள் தமக்குரிய விருதுகளை றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி குழுமத்தின் பணிப்பாளர் பேராசிரியர் லக்ஷ்மன் ஆர் வட்டவல மற்றும் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த வருடாந்த விநியோகத்தர் ஒன்றுகூடல் நிகழ்வு, 'ரஜகமனே கௌரோத்தமச்சார' (ராஜ பயணத்தின் கௌரவிப்பு) எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது. இந்தியாவின் பிர்லா டயர் கம்பனியின் சர்வதேச விற்பனை பிரிவின் தலைமை அதிகாரி அஷிஷ் குமார் மற்றும் கொரியாவின் நெக்சன் டயர் கம்பனியின் ஆசியா (இந்தியா, இலங்கை, பூட்டான், நேபாளம், பங்களாதேஷ்) முகாமைத்துவ பணிப்பாளர் ஜே.கே. சொய் ஆகியோர் இந்ந்pகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
ரிடிரெடிங் பிரிவிலிருந்து ஐம்பத்து ஐந்து விற்பனை முகவர்கள் மற்றும் டயர் டிரேடிங் பிரிவிலிருந்து பத்து முகவர்களும் விருதுகளுக்கா தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
ரிடிரெடிங் பிரிவின் சிறந்த விநியோகத்தருக்கான விருதை (நாடு முழுவதையும் உள்ளடக்கி) திக்வெல்ல ஷாந்தி டயர் மார்ட் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. எச்.எம்.ரி.ஜே ஷாந்திரட்ன பெற்றுக்கொண்டார். இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே ரம்புக்கன சிசிர டயர் ஹவுஸ் உரிமையாளர் டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு சிசிர குமார மற்றும் பலாங்கொட ஜயந்தி டயர் சென்ரர் உரிமையாளர் ஏ.பி.அம்பகஹாவத்த ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதுபோன்று, டயர் டிரேடிங் பிரிவிலிருந்து சிறந்த விநியோகத்தருக்கான விருதை பன்னல ஹிருனி டயர் ஹவுஸ் உரிமையாளர் ஐ ஏ கருணாதிலக பெற்றுக் கொண்டார். இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே அனுராதபுரம் ஒடோ டயர் வேய்ஸ் (பிரைவேற) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் பி.ஏ.சுனில் பிரேமரட்ன மற்றும் திக்வெல்ல ஷாந்தி டயர் மார்ட் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. எச்.எம்.ரி.ஜே ஷாந்திரட்ன ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த உயர் நிலை விருது வழங்கும் வைபவத்தில் மேலும் விநியோகத்தர்களுக்கு 'உபஹார அபியச', 'உபஹார கௌரவ' மற்றும் 'கலாப அபிமானி' போன்ற கௌரவிப்புகளும் வழங்கப்பட்டிருந்தன. வர்த்தக நாமங்களுடன் சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகத்தர்களுக்கு அவர்களின் சேவையை கௌரவித்து தங்க விருதுகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த விருது வழங்கும் வைபவத்தை தொடர்ந்து குடும்பத்தாரின் வழமையான ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. மறுநாள் சமையல் நிகழ்ச்சிகளும், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளும் இடம்பெற்றிருந்தன. 'நேர்த்தியான சிந்தனை' எனும் தலைப்பில் பேராசிரியர். சரத் விஜேசூரிய உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார்.
'ரஜகமனே கௌரோத்தமச்சார' (ராஜ பயணத்தின் கௌரவிப்பு) நிகழ்வில் குழுமியிருந்தவர்கள் மத்தியில் றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரதீப் சமரதுங்க உரையாற்றுகையில், கம்பனி மாதாந்தம் சுமார் 45000 ரயர்களை ரீபில்டிங் பிரிவில் பெறுகிறது என்றார்.
'இந்த 45000 டயர்களில், சுமார் 5000 டயர்கள் வரை பாவனைக்கு உதவாத வகையில் கழிக்கப்படுகின்றன. எமது விற்பனை முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு டயர்களின் விரயத்தை குறைத்துக் கொள்வது தொடர்பில் தெளிவுபடுத்துவார்கள். எமது கம்பனியின் எதிர்பார்ப்பு என்பது ஆர்பிடெக் டயர்களை உயர் தரத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு சரியான் விலையில், சரியான நேரத்தில் வழங்குவதாகும்' என்றார்.
றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி 1932 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டிருந்தது. 1942 இல், கம்பனி ரீபில்டிங் டயர்கள் பிரிவில் இணைந்தது. இதன் மூலம் இலங்கையின் முதலாவது ரீபில்டிங் கம்பனி எனும் பெருமையையும் பெற்றுக் கொண்டது. படிப்படியாக உறுதியாக வளர்ச்சியடைந்த நிறுவனம், 1991 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் BANDAG கம்பனியுடன் இணைந்து 'ARPIDAG' டயர்களை இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது. டயர்கள் துறையில் ஈடுபடும் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த புரட்சிகரமான செயற்பாடாக இது அமைந்திருந்தது.
இலங்கையின் மிகப்பெரிய டயர் ரீபில்டிங் கம்பனியாக திகழும் றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனி, 50000 க்கும் அதிகமான DAG டயர்களையும், பாரம்பரிய வகையிலான ரீபில்ட் டயர்களையும் மாதமொன்றில் உள்நாட்டு சந்தைக்கு விநியோகித்து வருகிறது.
