2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 05 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீன நாட்டின் ஜனாதிபதி மற்றும் ஜப்பானின் முதலமைச்சர் ஆகியோரின் வருகைக்கு முன்னதாக பில்லியன் கணக்கான பெறுமதி வாய்ந்த அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. 
 
இந்த திட்டங்களில், கடவத்தை முதல் கெரவலபிட்டிய வரையிலான அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கான அனுமதி உள்ளடங்கியிருந்தது. அத்துடன் ஹம்பாந்தோட்டை சர்வதேச மையத்துடன் தொடர்புபடுத்தும் அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. சூரியவௌ, கல்வெல சந்தி மற்றும் மொரகெட்டிய ஆகிய பகுதிகளில் இந்த மேம்பாலங்களும் நெடுஞ்சாலைகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. 
 
இந்த இரு நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X