
இலங்கை சாரணர்கள் சம்மேளனத்துடன், இலங்கையின் நம்பிக்கையை வென்ற குடும்ப பாதுகாப்பு வர்த்தக நாமமான டெட்டோல் இணைந்து பாடசாலை மாணவர்களிடையே கைகளை தூய்மையாக வைத்திருக்கும் சுகாதார செயற்திட்டத்தை முன்னெடுக்க முன்வந்துள்ளது.
சாரணத்துவத்தின் மூலம் இளைஞர்களுக்கு சமமான செயற்பாடுகளை முன்னெடுத்து சுய ஆளுமையையும் கட்டியெழுப்பிக் கொள்ள முடிவதுடன், சமூகத்தையும் கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். இந்த ஆக்கத்திறன் வாய்ந்த சாரணர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்திக் கொடுக்க டெட்டோல் முன்வந்திருந்தது. அத்துடன், அவர்கள் வசிக்கும் சூழலில் நேர்த்தியான மாற்றத்தை ஏற்படுத்தவும் முனைந்திருந்தனர்.
டெட்டோலின் புத்தாக்கம் நிறைந்த 'டெட்டோல் தூய்மை வீரர்கள்' திட்டத்தினூடாக 150,000 மாணவர்களை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.
மாதம்பே நகரில் இடம்பெற்ற சர்வதேச ஜம்போரேயில் பங்குபற்றிய சாரணர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு டெட்டோலுக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
3500க்கும் அதிகமான சாரணர்கள் 30 க்கும் மேற்பட்ட நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த சாரணர் ஜம்போரேயில் பங்கேற்றிருந்தனர்.
ஜம்போரே நிகழ்ச்சி நிரலில் சுகாதாரம் தொடர்பிலான விசேட திட்டங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், சாரணர்களுக்கான உள்ளக மற்றும் வெளியக சாகச செயற்பாடுகளும், முகாமிடல், சமைத்தல், முகாம் எரித்தல் மற்றும் மேலும் பல மேடை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
டெட்டோலின் சர்வதேச தொனிப்பொருளான 'சுகாதாரத்துக்கான செயற்திட்டம்' என்பதற்கு அமைவாக கிருமி அகற்றல், தூய்மை மற்றும் முதலுதவி ஆகியவற்றில் அனுபவத்தை பகிரும் வகையில் சாரணர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஜம்போரே நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் பங்கேற்றிருந்தனர். இவர்களின் மூலம் சாரணர்களுக்கு கரங்களின் தூய்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருந்தது. 'டெட்டோல் தூய்மை வீரர்கள்' எனும் பட்டமும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
புதிய டெட்டோல் தூய்மை வீரர் தூதுவர்கள் என்பது பங்குபற்றியிருந்த சாரணர்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த சாரணர்கள் தமது பாடசாலைகளுக்கு திரும்பிச் செல்லும் போது ஏனைய சக மாணவர்களுக்கும் கரங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். குறிப்பிடத்தக்க மாணவர்களுக்கு பயிற்றுவிக்கக்கூடிய அளவுகளுக்கமைய (வெண்கலம், வெள்ளி மற்றும் தங்க) விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
சர்வதேச ஜம்போரே உடன் கைகோர்த்தமை தொடர்பில் ரெக்கிட் பென்கீசர் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை பணிப்பாளர் சின்கிளெயார் குரூஸ் கருத்து தெரிவிக்கையில், 'இந்த திட்டத்தினூடாக எமது இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறைக்கும் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் காணப்படக்கூடிய பிரச்சனைகள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்த முடியும். முழுமையான மேம்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் அதன் வினைத்திறன் பற்றி விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், கரங்களை கழுவிக் கொள்வதன் மூலம் நோய்களை இல்லாமல் செய்வது என்பது இலக்காக அமைந்திருந்தது' என்றார்.