.jpg)
சர்வதேச சந்தையில் நிலவும் தங்கத்தின் விலைச் சரிவு மேலும் ஆறு முதல் ஏழு மாதங்கள் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பொருளாதார நிலை மீட்சி கண்டு வரும் நிலையில், டொலரின் மதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்த நிலையில் காணப்படுவதற்கான வாய்ப்பு அதிகளவு காணப்படுவதாக உள்நாட்டு தங்க நிலை வியாபாரிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
டொலரின் பெறுமதி அதிகரித்துச் செல்கையில், தங்கத்துக்கான கேள்வி குறைவடைகிறது. இதன் காரணமாக தற்போதை விலைச் சரிவு சர்வதேச சந்தையில் பதிவாகியுள்ளது. ஆனாலும் உள்நாட்டு சந்தையில் இந்த விலை குறைப்பை வங்கிகள் பெருமளவில் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் கடந்த ஆண்டு சீனா கொள்வனவு செய்திருந்த பெருமளவான தங்கத்தை தற்போது அதிகளவு விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளமையும் விலைச் சரிவுக்கு பிரதான காரணியாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.