.jpg)
திங்கட்கிழமை சீராக்கம் காரணமாக மறைபெறுமதியை பதிவு செய்திருந்ததை தொடர்ந்து, மீண்டும் நேர் பெறுமதிகளுடன் பங்குச்சந்தை நேற்றைய தினம் நிறைவடைந்திருந்தது. கார்சன் கம்பர்பட்ச், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நெஸ்லே லங்கா ஆகியன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. கொமர்ஷல் வங்கி, ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் நந்தா இன்வெஸ்ட்மன்ட்ஸ் அன்ட் ஃபினான்ஸ் ஆகியவற்றின் மீது மொத்த கைமாறல்கள் பதிவாகியிருந்தன.
புரள்வு பெறுமதி 2 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது சம்பத் வங்கி பங்குகளின் மீது பதிவாகியிருந்ததுடன், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி, அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் லங்கா ஐஓசி பங்குகளின் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. மேலும், ஹேலீஸ் எம்ஜிரி பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்குகளை கொள்வனவு செய்திருந்தனர்.
வங்கி, நிதியியல் மற்றும் காப்புறுதித் துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (கொமர்ஷல் வங்கி பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 0.21% சரிவை பதிவு செய்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்கொன்றின் விலை 1.00 ரூபாவால் (0.64%) உயர்ந்து 157.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 740,000 பங்குகளால் குறைந்திருந்தது.
பன்முகத்துறை என்பது சந்தையின் புரள்வு பெறுமதியில் இரண்டாவது உயர் பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் பங்களிப்புடன்) இந்த துறை 0.51% உயர்வை பதிவு செய்திருந்தது. ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 2.80 ரூபாவால் உயர்ந்து 54.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 2,290,087 பங்குகளால் உயர்ந்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் குறைந்து 54.00 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 401,379 பங்குகளால் உயர்ந்திருந்தது.
டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா மற்றும் வலிபல் பவர் ஆகிய பங்குகளும் புரள்வு பெறுமதியில் உயர் பங்களிப்பை வழங்கியிருந்தன. டெக்ஸ்ச்சர் ஜேர்சி லங்கா பங்கொன்றின் விலை 0.30 ரூபாவால் (1.48%) அதிகரித்து 20.60 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 452,696 பங்குகளால் உயர்ந்திருந்தது. வலிபல் பவர் பங்கொன்றின் விலை 0.60 ரூபாவால் அதிகரித்து 6.50 ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டு உரிமையாண்மை 1,281,661 பங்குகளால் குறைந்திருந்தது.