
இந்தியாவிலுள்ள பல்தேசிய நிறுவனங்களில் பணியாற்று பிரதம நிறைவேற்று அதிகாரிகளில் சிறந்த பிரதம நிறைவேற்று அதிகாரியாக இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட ராஜன் ஆனந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கூகுள் இந்தியா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
முன்னாள் பிரபல நீச்சல் வீரரும், கின்னஸ் சாதனையாளருமான குமார் ஆனந்தன் மற்றும் மானெல் ஆனந்தன் (சமரவீர) ஆகியோரின் புதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ப்ளு ஓசியன் வென்ச்சர்ஸ் அமைப்பின் ஸ்தாபக பங்காளருமாவார். இந்த தரப்படுத்தலை இந்தியாவின் எகனோமிக் டைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரப்படுத்தலில் முதல் பத்து இடங்களை பெற்றுக் கொண்டவர்களின் விபரங்கள்,
1. ராஜன் ஆனந்தன் - கூகுள் இந்தியா, தலைமை அதிகாரி
2. டி.சிவகுமார் – பெப்சிகோ இந்தியா, பிரதம நிறைவேற்று அதிகாரி
3. சுனில் கௌஷால் - ஸ்டான்டர்ட் சார்ட்டட் இந்தியா, பிரதம நிறைவேற்று அதிகாரி
4. சஞ்சீவ் மேத்தா - ஹிந்துஸ்தான் யுனிலீவர், பிரதம நிறைவேற்று அதிகாரி
5. மார்டின் பீட்டர்ஸ் - வொடாஃபோன் இந்தியா, முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி
6. ஷின்ஸோ நகாநிஷி – மாருதி சுசுகி, பிரதம நிறைவேற்று அதிகாரி
7. கல்பனா மோர்பாரியா – ஜேபி மோர்கன் இந்தியா, பிரதம நிறைவேற்று அதிகாரி
8. நைனா லால் கிட்வாய் - எச்எஸ்பிசி இந்திய, தலைமை அதிகாரி
9. பார்மிட் ஜாவெரி – சிட்டி இந்தியா, பிரதம நிறைவேற்று அதிகாரி
10. பி.டி. பார்க் - சம்சுங் இந்தியா, தலைமை அதிகாரி