
இலங்கையில் டயர்கள் ரிடிரெடிங் சந்தையில் புதிய அறிமுகமாக யுனிகோர்ன் டயர் ரிடிரெட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் அமைந்துள்ளது. நிறுவனத்தின் புதிய நவீன வசதிகள் படைத்த இரு உற்பத்தி நிலையங்களை வட்டரக, பனாலுவ தொழிற்பேட்டையில் அண்மையில் நிறுவியிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரான அசங்க ரத்நாயக்க மற்றும் மேலும் பல அதிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தொழிற்பேட்டையில் Lot 2F மற்றும் Lot B ஆகிய இரு அலகுகள், சூழலுக்கு பாதுகாப்பான முறையில் மாதாந்தம் 6000 டயர்களை ரிடிரெடிங் செய்யும் ஆற்றலை கொண்டுள்ளது. குளிர்மையான செயற்பாடு மற்றும் பாரம்பரிய மீள கட்டியெழுப்பும் வெப்ப செயற்பாடு ஆகியவற்றை பின்பற்றுகிறது.
யுனிகோர்னின் சிறப்பியல்பு என்பது சிறந்த டயர்களை வழங்குவது மற்றும் ஒப்பற்ற சேவைகளை சகாய விலையில் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பது என்பதாக அமைந்துள்ளது. தற்போது யுனிகோர்ன் ரிடிரெடட் டயர்களை நாடு முழுவதும் காணப்படும் விநியோகத்தர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2015 ஆம் ஆண்டில் ஒரு மாதத்தில் 10000 டயர்களை ரிடிரெட் செய்ய யுனிகோர்ன் திட்டமிட்டுள்ளது என அசங்க ரத்நாயக்க தெரிவித்திருந்தார். இந்த இலக்கை எய்தும் வகையில் ஊழியர்களின் எண்ணிக்கை, விற்பனையாளர்களின் எண்ணிக்கை மற்றும் விநியோகத்தர்களின் எண்ணிக்கை போன்றன அதிகரிக்கப்படும் என்றார்.
முகாமைத்துவ பணிப்பாளர் அசங்க ரத்நாயக்க மேலும் கருத்து தெரிவிக்கையில், 'யுனிகோர்ன் டயர்களில் காணப்படும் சிறப்பம்சமாக symmetric tread வடிவமைப்பின் மூலமான சிறந்த உராய்வு தன்மை வழங்கப்பட்டு வீதியில் பயணிக்கையில் அதிகளவு சௌகர்யத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. நீண்ட தூரம் பயணிக்க உதவியாக அமைந்திருப்பது இந்த தயாரிப்பின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். எனவே, கம்பனி பயண தூரத்துடன் தொடர்புடைய டிரெட் உத்தரவாதத்தை கம்பனி வழங்குகிறது. எனவே வாகன உரிமையாளர்கள் யுனிகோர்ன் டயர்களை பயன்படுத்துவதன் மூலம் அதிகளவு பணத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும்' என்றார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'வாகன உரிமையாளர்களுக்கு புத்தாக்கம் என்றதும் யுனிகோர்ன் என்பது முதலில் நினைவில் வரும் நாமமாக அமைந்துள்ளது. நாம் தற்போது off-road தேவைகளுக்கான புதிய தயாரிப்பொன்றை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ளோம். மேலதிக ஆழமான தவாளிப்புகளின் மூலம் துறையில் காணப்படும் சிறந்த தயாரிப்பாக அமைந்திருக்கும். எனது விநியோகத்தர்களும், வாகன பாவனையாளர்களும் அதிகளவில் மேற்கொள்ளும் தெரிவாக அமைந்திருக்கும்' என்றார்.
ரத்நாயக்க அவர்களின் கருத்துக்கமைய, யுனிகோர்ன் டயர் ரிடிரெட்ஸ் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தை தாபித்திருந்ததன் மூலம், உயர் தரம் வாய்ந்த மற்றும் நீண்ட காலம் தங்கியிருக்கக்கூடிய தயாரிப்புகளை உள்நாட்டு பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைந்திருந்தது.
