
மூலிகைகளால் தயாரிக்கப்படும் பிரத்தியேக பராமரிப்பு பொருட்களின் உற்பத்தியில் ஈடுபடும் இலங்கையின் முன்னணி நிறுவனமான சுவதேஷி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக ரிதிகம, ரிதி விஹாரைக்கு ஒளியூட்டியிருந்தது. குருநாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் வருடாந்த |ஒளி விழா', இந்த ஆண்டும் எசல பௌர்ணமி காலப்பகுதியான ஆகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வுக்கு 'சுவதேஷி கொஹோம்ப ஆலோக பூஜா சத்காரய' என பெயரிடப்பட்டிருந்தது.
சுவதேஷி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாரி விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையின் நூறு வீதம் உரிமையாண்மையை கொண்ட நிறுவனமாக திகழும் சுவதேஷி, இலங்கையின் பாரம்பரிய விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதில் அதிகளவு அக்கறை காண்பிக்கிறது. இதற்கமைவாக, வருடாந்த ஒளிNயுற்றல் நிகழ்வுகளுக்கு தனது பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது. இலங்கைத் தாய்க்கு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் கடமையாக இது அமைந்துள்ளது' என்றார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'எமது பாரம்பரியம் குறித்து எமது எதிர்கால சந்ததியினருக்கும் உணர்த்துவது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அத்துடன் யாத்திரிகர்கள் அனைவரினதும் நலன் கருதி நாம் இந்த ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறோம. இலங்கையின் பாரம்பரிய மற்றும் சம்பிரதாய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நூற்றுக்கு நூறு வீதம் இலங்கை நிறுவனம் என்ற வகையில் நாம் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தை பொறுப்புணர்வுடன் செயலாற்றுவதன் மூலம் நடைமுறைப்படுத்தி வருகிறோம்' என்றார்.
மஹாவம்சத்துக்கு அமைவாக, அனுராதபுர இராஜதானி காலப்பகுதியில், துட்டகைமுனு அரசன் இலங்கையை ஆட்சிபுரிந்த வேளையில், ரிதி விஹாரையை நிர்மாணிப்பதற்காக ருவனவெலி மஹாசாயவை கட்டி முடிப்பதற்காக அலுமினிய மூலப்பொருட்களை கொண்டு இந்த விஹாரை நிர்மாணிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
'அர்ஹத்' நிலையை எய்தியிருந்த 500 பிக்குகர்கள் இந்த விஹாரையில் தங்கியிருந்ததை தொடர்ந்து, கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க மன்னன் மூலமாக தேவாலயமாக இந்த விஹாரை மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
சுவதேஷி நிறுவனத்தின் மூலம் களனி ரஜமஹா விஹாரை (விபீஷண தெய்வம்), றுகுணு கதிர்காம ஆலயம் (முருகன்), இரத்தினபுரி சமன் ஆலயம் (சமன் தெய்வம்) மற்றும் தெவுந்தர உத்பலாவரண ஸ்ரீ விஷ்ணு மஹா ஆலயம் (விஷ்ணு தெய்வம்) ஆகிய நான்கு தெய்வங்களுக்காக இடம்பெறும் திருவிழாக்களின் போது ஒளியூட்டலை மேற்கொண்டு வருகிறது.
1941ஆம் ஆண்டு கந்தானையில் தாபிக்கப்பட்டு ஆரம்பமான சுவதேஷி நிறுவனம், இந்நாட்டு வளங்களை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அர்ப்பணித்தது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் கொஹோம்ப ஆயுர்வேத சோப், கொஹோம்ப பேபி, ராணி சந்தன சோப், அப்சரா வெனிவெல், பர்ல்வயிட், லக்பார் ஆடை சவர்க்காரம், பிளாக் ஈகள் பர்ஃவியும் மற்றும் ஆஃவ்ட்டர் ஷேவ், சுவதேஷி ஷவர் ஜெல் மற்றுமு; சந்தையில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள லிட்டில் ப்ரின்சஸ் ஆகியன சந்தையில் பிரபல்யமடைந்துள்ளன. முன்னணி ஆயுர்வேத சோப் வகையான கோஹோம்ப ஹேர்பல் சோப் வகையை இந்நிறுவனம் உற்பத்தி செய்து விநியோகிப்பதுடன், பாரம்பரிய அழகு சோப் வகையான ராணி சந்தன சோப் வகையையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்தி வருகிறது.
கம்பனியின் மூலமாக உயர்தர மூலிகை தயாரிப்பாக 'கொஹோம்ப ஹேர்பல்' மற்றும் 'ராணி சந்தனசோப்' போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.