
அமானா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான சேவையை வழங்குவதற்காக அக்கரைப்பற்று கிளையை 102, பிதான வீதி, அக்கரைப்பற்று என்ற முகவரிக்கு இடம் மாற்றியது. தமது வாடிக்கையாளர்கள் சௌகரியமாகவும், இலகுவாகவும் அடைந்து கொள்ளக் கூடிய இடத்திற்கு இந்த கிளை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இடம் இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாயில் அவர்களினால் அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.எல். முஹம்மத் அஸ்மி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. ஏ.எல்.எம். ஜமீல், அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர், சிரேஷ;ட முகாமைத்துவ உறுப்பினர்கள், நலன் விரும்பிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என பலரின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வு பற்றி அங்கு கருத்து வெளியிட்ட திரு. அஸ்மீர் அவர்கள் ' அக்கரைப்பற்று பிரதேசம் எப்போதும் கிழக்கு மாகாணத்தில் அமானா வங்கிக்கு இருக்கக்கூடிய ஒரு கேந்திர நிலையமாகும். இந்த கிளை 2008ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இயங்கி வரும் அதேவேளை, அந்தப் பகுதியில் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கும், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக அமைப்புக்களுக்கும் உதவி செய்யக்கூடிய ஒரு முன்னணி நிதிச்சேவை வழங்குனராக விளங்குகின்றது. கடந்த சில வருடங்களாக இந்தப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் வழங்கும் ஆதரவுக்கு எமது வங்கி நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், எமது இந்த புதிய இடத்திலிருந்து மிகச் சிறந்த சேவையை வழங்க திடசந்தர்ப்பமாய் உள்ளோம் ' என்றார். அக்கரைப்பற்றுக் கிளை தமது வாடிக்கையாளர்களின் சௌகரியத்திற்காக ATM இயந்திர வசதியையும் கொண்டுள்ளது.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷியா பேர்ஹட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.