2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பின்தங்கிய வீதி புனரமைப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 26 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆறு மாகாணங்களைச் சேர்ந்த பின்தங்கிய பிரதேசங்களின் வீதி புனரமைப்பு செயற்பாடுகளுக்காக 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
 
இலங்கையின் பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பின்தங்கிய பிரதேசங்களின் வீதிகளின் புனரமைப்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன. பின்தங்கிய பிரதேசங்களின் அபிவிருத்தியில் பாதைகள் முக்கிய பங்களிப்பை வழங்குவதன் காரணமாக, இந்த பாதைகளை புனரமைப்பு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.
 
தென் மாகாணம், சப்ரகமுவ, மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டம், மத்திய மாகாணம், வட மத்திய மாகாணம் மற்றும் வட மேல் மாகாணம் போன்றன இந்த திட்டத்துக்கமைவாக முன்னெடுக்கப்படவுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X