
க்லோகாட் வர்த்தகநாமமானது, பற்சிதைவை தவிர்க்கும் முகமாக இலங்கை குடும்பங்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அண்மையில் பற்சிதைவை தவிர்க்கும் வகையிலான தேசிய மட்ட விழிப்புணர்வு செயற்திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.
ஹேமாஸ் மெனுஃபக்சரிங் (பிரைவேற்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி பற்பசை வர்த்தகநாமமான க்லோகாட், அதன் 'துலக்குங்கள் - உறுதிமொழி எடுங்கள் - வெல்லுங்கள்' எனும் வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தினூடாக வாய்ச்சுகாதாரம் மற்றும் பற்சிதைவிலிருந்து பாதுகாத்து வருகிறது. இந்த செயற்திட்டத்தின் மூலம் சிறந்த வாய்ச் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதற்கு மக்களை ஊக்குவித்து வாய்ச்சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது.
'இலங்கை குடும்பங்களுடன் இணைந்து செயற்பட்டு பலரது வாழ்வை சென்றடைய நாம் எதிர்பார்த்துள்ளோம். தினசரி ப்ளோரைட் அடங்கிய பற்பசை கொண்டு பல் துலக்குவதால் ஏற்படும் அனுகூலங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிக்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நோக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் க்லோகாட் பயணிக்கவுள்ளது. இதனூடாக கணிசமானளவு பற்சிதைவு உருவாதல் குறைக்கப்படுவதுடன், ஒட்டுமொத்த வாய்ச்சுகாதாரம் மேம்படுத்தப்படும்' என ஹேமாஸ் மெனுஃபக்சரிங்(பிரைவேற்) லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் ரோய் ஜோசப் தெரிவித்தார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய மட்ட செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக, க்லோகாட் குழுவினர் இதுவரை இலங்கையில் 65 இடங்களுக்கு சென்று 13இ536 நுகர்வோரிடமிருந்து சிறந்த வாய்ச்சுகாதார நடைமுறைகளை கடைபிடிப்பதற்கான உறுதிமொழியை பெற்றுக் கொண்டுள்ளனர். குடும்பங்கள், விசேடமாக குழந்தைகள் மத்தியில் பற்சிதைவு ஏற்படுவதை குறைத்தல் மற்றும் பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை உருவாக்கும் நோக்கில் இக்குழுவினர் எதிர்வரும் வாரங்களில் நாடுமுழுவதுமுள்ள 126 இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
'பற்சிதைவு என்பது மிகவும் பொதுவான, கட்டுப்படுத்தக்கூடிய, ஆனால் விசேடமாக குழந்தைகள் மத்தியில் வலியை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். விழிப்புணர்வு, நடைமுறைகள் மற்றும் சிறந்த வாய்ச்சுகாதார திறன்கள் மேம்படுத்தலின் ஊடாக, நேர்மறையான மாற்றம் மற்றும் நேர்மறையான வாய்ச்சுகாதார முயற்சிகளை ஊக்குவிக்கும் எமது அர்ப்பணிப்பை தொடருவோம்' என ஜோசப் தெரிவித்தார்.
கராம்பு எண்ணெய் மற்றும் விஞ்ஞான ரீதியில் பரிசோதிக்கப்பட்ட க்லோகாட்; ஆனது, உள்நாட்டு நுகர்வோரின் தேவைகளை நன்குணர்ந்துள்ளது. பற்சிதைவை தடுக்கும் தேசியமட்ட செயற்திட்டம் ஊடாக, பற்சிதைவை தடுத்தல் மற்றும் வாய்ச்சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தினசரி காலை மற்றும் இரவில் பல் துலக்குவதன் முக்கியத்துவத்தை, குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் ஊக்குவிப்பதே இவ் வர்த்தகநாமத்தின் குறிக்கோளாக அமைந்துள்ளது.
இந்த செயற்திட்டமானது, தனது குடும்பத்தில் பற்சிதைவை தடுப்பதாக உறுதிமொழியை எடுக்கும் நுகர்வோருக்கு வெகுமதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. பரிசிழுப்பின் ஊடாக ஒவ்வொரு மாதமும் ஒரு வெற்றியாளர் தெரிவு செய்யப்பட்டு அவருக்கு 1 மில்லியன் ரூபா பெறுமதியான நிலையான வைப்பு வெகுமதியாக வழங்கப்படும். இது மூன்று மாதங்களுக்கு தொடரவுள்ளது. மேலும் மடிக்கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மவுண்டேயின் சைக்கிள்கள், பைகள் மற்றும் கைக்கடிகாரங்கள் போன்றனவும் பரிசில்களாக வழங்கப்படவுள்ளன.
இந்த செயற்திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான, பற்சிதைவிலிருந்து விடுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நடத்தை மாற்றங்களை மேற்கொள்வதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன.