.jpg)
-ச.சேகர்
கொழும்பு பங்குச்சந்தை கடந்தவாரம் சரிவான பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. முன்னைய வாரங்களுடன் ஒப்பிடுகையில் சந்தை முதலீட்டாளர்களின் ஈடுபாடும் குறைந்தளவில் காணப்பட்டது. விடுமுறை நாட்களின் காரணமாக வாரத்தின் செயற்பாடுகள் மூன்று தினங்கள் மட்டுமே இடம்பெற்றது. இதனை தொடர்ந்து எதிர்வரும் வாரத்தை சந்தை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 7,321.00 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 4110.02 ஆகவும் பதிவாகியிருந்தன.
ஒக்டோபர் 06ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 6,020,868,271 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 30,135 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 28,689 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,446 ஆகவும் பதிவாகியிருந்தன.
செவ்வாய்க்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹேலீஸ் மற்றும் கார்சன்ஸ் கம்பர்பெட்ச் ஆகிய பங்குகள் மீது விலைச்சரிவுகள் பதிவாகியிருந்ததன் காரணமாக, சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்தன. புரள்வு பெறுமதி 1.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு என்பது சிலோன் டொபாக்கோ கம்பனி, டயலொக் ஆக்சியாடா, நெஸ்லே லங்கா, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு PCH ஹோல்டிங்ஸ், PC பார்மா மற்றும் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. மேலும், கலப்பு ஈடுபாடு என்பது கீல்ஸ் ஹோட்டல்ஸ், றிச்சர்ட் பீரிஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
வியாழக்கிழமை
சுட்டிகள் கலப்பு பெறுமதியை பதிவு செய்து நிறைவடைந்திருந்தது. புரள்வு பெறுமதி 1.4 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடுகள் கெல்சி டிவலப்மன்ட்ஸ், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி மற்றும் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது பதிவாகியிருந்தது. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு கொமர்ஷல் கிரெடிட் அன்ட் ஃபினான்ஸ் மற்றும் பான் ஏசியன் பவர் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. கலப்பு ஈடுபாடு என்பது அக்சஸ் என்ஜினியரிங் மற்றும் லங்கா ஐஓசி பங்குகள் மீது பதிவாகியிருந்தன. வெளிநாட்டவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
வெள்ளிக்கிழமை
சுட்டிகள் மறை பெறுமதிகளை பதிவு செய்து வாரத்தை பூர்த்தி செய்திருந்தன. சிலோன் டொபாக்கோ, DFCC வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி போன்றவற்றின் மீது விலைச் சரிவுகள் பதிவாகியிருந்தன. சந்தை புரள்வு பெறுமதி 2.8 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. உயர் நிகர பெறுமதி வாய்ந்த மற்றும் நிறுவனசார் ஈடுபாடு என்பது ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், டிப்ட் புரொடக்ட்ஸ் மற்றும் கொமர்ஷல் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தன. சிறியளவிலான முதலீட்டாளர்களின் ஈடுபாடு பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ், ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ், கொமர்ஷல் கிரெடிட், எஸ்எம்பி லீசிங் மற்றும் மேர்ச்சன்ட் வங்கி ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. இதேவேளை, கலப்பு ஈடுபாடு அக்சஸ் என்ஜினியரிங், டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி லங்கா, எம்ரிடி வோல்கர்ஸ் மற்றும் லோஃவ்ஸ் காஸ் ஆகியவற்றின் மீது பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கு விற்பனையில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிங்கர் இன்ட, டிரேட் ஃபினான்ஸ், சிஐரி, கொமர்ஷல் டிவ., மற்றும் கொமர்ஷல் கிரெடிட் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.
லங்கா சென்ச்சரி (உரிமை), மொரிசன்ஸ், சணச டிவ. வங்கி, மிலேனியம் ஹவுஸ் மற்றும் டேர்டன்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.
தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,300 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,600 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.73 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 213.72 ஆக காணப்பட்டிருந்தது.