2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வணிக புகைப்படக் கண்காட்சி

Kogilavani   / 2014 ஒக்டோபர் 13 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.பாக்கியநாதன்


கிழக்கின் எழுச்சி திட்டத்தின் கீழ் வணிக புகைப்படக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை(12) மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி ஜி.ஐ.இசற் உடன் இணைந்து சிறிய நடுத்தர முதலீட்டாளர்களுக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மற்றும் தொழில்நுட்பவியல் கல்வி சார் மாணவர்களுக்கும்; விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இக் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தது. 

இதன்போது. நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி வாடிக்கையாளர்களில் வியாபாரத்தில் அதிகூடிய அடைவு மட்டத்ததைப் பெற்ற வியாபாரிகளின் வியாபார செயல்முறைகள் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கை- ஜேர்மனிய நட்புறவின் வெளிப்பாடாக 1952 ஆம் ஆண்டு ஜோமனியில் இருந்து 6 பஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.

குறிப்பிட்ட காலத்தின் பின்பு 2 பஸ்வண்டிகள் இயங்க மறுத்ததால் திருத்துவதற்கு ஜேர்மனியில் இருந்து இரண்டு திருத்துனர்கள் வரவழைக்கப்பட்டனர்.

தொடர்ந்து இவ்வாறு வரவழைக்க முடியாததனால் மொறட்டுவை, ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவகம் ஆரம்பிக்கப்பட்டதாக ஜி.ஐ.இசற் அதிகாரி தெரிவித்தார்.

தற்போது இந்நிலையத்தின் கிளை கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X