.jpg)
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் சரிவை பதிவு செய்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பதிவாகிய குறைந்த பெறுமதியை நேற்றைய தினம் பதிவு செய்திருந்ததாக சர்வதேச செய்திச் சேவைகள் அறிவிக்கின்றன.
குறைந்தளவு கேள்வி காணப்பட்ட போதிலும் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் ஈடுபடும் நாடுகள் உற்பத்தியை தொடர்ந்து சீராக பேணி வருகின்றமை இந்த விலைச் சரிவுக்கு ஏதுவாக அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மை வாரங்களில் குறைந்த கேள்வி மற்றும் உயர்ந்த விநியோகம் போன்றவற்றின் காரணமாக மசகு எண்ணெய் விலை 20 வீதத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைய ஏதுவாக அமைந்திருந்தது.
ஒபெக் அமைப்பு, முன்னர் விலை குறைவடைந்து செல்கையில், தனது உற்பத்தி செயற்பாடுகளை குறைத்து, விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், தற்போது இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் முறையாக ஒத்துழைப்பு வழங்காமயால் இந்த செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சவுதி அரேபியா தற்போது நிலவும் குறைந்த விலை தமக்கு எவ்வித பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ளது.