
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒக்டோபர் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக முதியோர் தினத்திற்கு இணைவாக ஒக்டோபர் மாதத்தை அமானா வங்கி சிரேஷ;ட பிரஜைகளுக்கான சேமிப்பு மாதமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ஒரு சேமிப்பு பழக்கத்திற்கு சிரேஷ;ட பிரஜைகளை தூண்டும் வகையில் இந்த மாதத்தில் ஒரு விசேட நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்படும் அதேவேளை, புதிய கணக்கை திறக்கும் போது அதற்காக விசேட பரிசில்களும், அனுகூலங்களும் வழங்கப்படும்.
இந்த முன்னெடுப்பு குறித்து கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் மூலோபாய சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் திரு. சித்தீக் அக்பர் 'சிரேஷ;ட பிரஜைகளுக்கான சேமிப்பு மாதத் திட்டமானது பல வருடங்களாக கஷ்டப்பட்டு உழைத்து தற்போது தமது ஓய்வுக் காலத்தை தமது சொந்த நிதி மற்றும் வளங்களுடன் மன நிம்மதியாக கழிப்பதற்கு எதிர்பார்க்கும் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளுக்கு ஒரு சமர்ப்பணமாக விளங்குகின்றது' என்றார்.
இம்மாதம் சிரேஷ்ட பிரஜைகள் சேமிப்பு மற்றும் தவணை முதலீட்டுக் கணக்கொன்றினை ஆரம்பித்து கவர்ச்சிகரமான பரிசுகளை பெறுவதுடன் உயர் இலாபப் பகிர்வினையும் பெற்றிடலாம்.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.