2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இஸ்லாமிய நிதிச் செய்தி மன்றத்துடன் அமானா வங்கி

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


கடந்த சில வருடங்களாக உள்நாட்டு இஸ்லாமிய நிதித் துறை காட்டியுள்ள பாரிய வளர்ச்சியைத் தொடர்ந்து உலகின் புகழ்மிக்க இஸ்லாமிய நிதிச் செய்திகள் மன்றம் இலங்கையில் தொடர்ந்தும் மூன்றாவது தடவையாக நடைபெறவுள்ளது. இந்த இஸ்லாமிய நிதிச் செய்தி மன்றத்தினை நடாத்துவதற்காக அமானா வங்கி மலேஷpயாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ரெட்மனி குழுவுடன் கூட்டிணைந்து, இஸ்லாமிய நிதித் துறையின் சவால்கள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கையின் இஸ்லாமிய நிதித் துறையையும், அதன் பிரதான ஒழுங்குபடுத்தல் பங்குதாரர்களையும் இம்மானாட்டில் ஒன்றிணைக்கின்றது.  
 
இந்த பொதுமன்றம் கொழும்பு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் 2014, ஒக்டோபர் 21ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இதில் இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், ஒழுங்குபடுத்தல் அதிகாரிகள், பயிற்சியாளர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் பலர் கலந்து கொள்வார்கள். இந்த நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் திரு. அஜித் நிவாட் கப்ரால் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். 
 
இஸ்லாமிய நிதிச் செய்தி மன்றம் பற்றி கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. முஹம்மத் அஸ்மீர் அவர்கள் 'உலகின் புகழ்மிக்க இஸ்லாமிய நிதிச் செய்தி மன்றத்தின் ஒரு பங்காளியாக மீண்டும் பங்கேற்பதில் அமானா வங்கி மகிழ்ச்சி அடைகின்றது. வட்டிசாராத இஸ்லாமிய வங்கித் துறை மற்றும் நிதித் துறையின்; நிபுணர்களுக்கும்;, பின்பற்றுனர்களுக்கும் இந்த மன்றம் ஒரு கட்டாய நிகழ்வாக மாறியுள்ளது. இஸ்லாமிய நிதிச் செய்தி மன்றமானது நிதித்துறைக்கான அறிவையும், சிறந்த நடைமுறைகளையும் பகிர்ந்து கொள்வதற்குரிய முன்மாதிரிமிக்க ஒரு களமாகும் என்பதோடு, சவால்கள் மற்றும் வாய்ப்புக்களைப் பற்றி கலந்துரையாடி முன்னோக்கி செல்வதற்கான ஒரு சந்தர்ப்பமாகவும் விளங்குகின்றது. இந்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நான் எதிர்பார்த்துள்ளேன்' என்றார். 
 
2006ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய நிதிச் செய்திகள் மன்றம் பல நிகழ்ச்சிகளை பூர்த்தி செய்துள்ள அதேவேளை, 20 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து, இஸ்லாமிய நிதித் துறையின் முக்கியமான மற்றும் நடைமுறை அபிவிருத்திகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அறிவை வழங்கியுள்ளது. நிதித் துறையில் மிகச் சிறந்த மற்றும் வளமான நிறுவனங்களுடன் வலையமைப்பை ஏற்படுத்தி கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கான பெறுமதிமிக்க களமாகவும் இது விளங்குகின்றது. இந்த மன்றம் பற்றிய மேலதிக தகவல்களுக்கும், பதிவு சம்பந்தமான விபரங்களுக்கும் www.redmoneyevents.com என்ற மன்றத்தின் இணையத்தளத்தை பார்வையிடவும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X