
தீவா, தமது பெருமைக்குரிய வாடிக்கையாளர்களுக்கு கொழும்பை அண்மித்து பெறுமதி வாய்ந்த காணிகளை வழங்கும் ஊக்குவிப்பு திட்டத்தை நான்காவது தடவையாகவும் முன்னெடுத்திருந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக வாடிக்கையாளரிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பு காரணமாகவே தீவா அதன் விசேட ஊக்குவிப்பு திட்டத்தை தொடர்ந்து நான்காவது தடவையாகவும் மேற்கொண்டிருந்தது.
நான்கு கட்டங்களாக நடைபெற்ற இச் செயற்றிட்டம் ஊடாக தீவா இதுவரை கொழும்பை அண்மித்து ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான பதினாறு காணித்துண்டுகளை வழங்கியுள்ளது. 2011ஆம் ஆண்டில் முதற்தடவையாக 'தீவா வட்டத்துக்கு காணி' எனும் கருப்பொருளின் கீழ் கொழும்புக்கு அருகாமையில் ஒரு மில்லியன் பெறுமதியான 4 காணித்துண்டுகளை தீவா வழங்கியிருந்தது. அதேபோன்று 2012இல் 'தீவா நுவனக்காரியன்ட ஹிடமக்' கருப்பொருளின் கீழ் இரண்டாவது ஆண்டாகவும் 3 காணிகளை வெகுமதியாக கையளித்திருந்தது. 2013ஆம் ஆண்டில் காணித்துண்டுகள் மூன்றினை வழங்கி 'தீவா புதையலுடன் காணி' செயற்றிட்டத்தை நிறைவு செய்திருந்தது.
இந்த வருடம் 'தீவா காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்டத்தின் மூலம் காணியை வென்ற அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்ட கே.சிசிர ஆனந்த பெரேரா அவர்கள் கொடுகொட, கசகாஹவத்த பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர். பாடசாலை செல்லும் வயதிலுள்ள சிறு பிள்ளையொன்றின் தந்தையான இவர் தனது தாயார் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். அவருடைய மனைவி பொருளாதார சிரமங்களுக்கு உதவிடும் வகையில் மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றார்.
இம்முறை தீவா மூலம் காணி வரத்தை பெற்ற சிசிர தனது மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்து கொண்டார் 'நாம் மிகுந்த பொருளாதார கஷ்டங்களின் மத்தியிலேயே வாழ்ந்து வருகிறோம். எனது தாயார் நோய்வாய்பட்டுள்ளார். அவரது மருந்து மாத்திரைகள் மற்றும் பிள்ளையின் படிப்பிற்கு தேவையான செலவுகளை எனது மாதாந்த சம்பளத்தை கொண்டு சமாளிப்பதென்பது முடியாத காரியமாகும். இவை எல்லாவற்றையும் விட எமக்கிருந்த மிகப்பெரிய குறை எமக்கென்று ஒரு காணியையோ, வீட்டையோ கொண்டிருக்காமை தான். தீவா மூலம் இறுதியாக எமக்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது' என்றார்.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக தீவாவினை தாம் கொள்வனவு செய்வதாகவும், அவ்வுற்பத்தி மீதான விசுவாசம் ஒருபோதும் குறையவில்லை எனவும், ஹேமாஸ் நிறுவனம் வழங்கிய இந்த பெருமைக்குரிய வெகுமதியை தனது பிள்ளையால் கூட விற்க அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் சிசிர மேலும் தெரிவித்தார்.
காணி மாத்திரமன்றி, குலுக்கல் தெரிவினூடாக தினசரி பணப்பரிசில்கள் மற்றும் தங்க நாணயங்கள் போன்றவற்றை தமது வாடிக்கையாளருக்கு வழங்கி வரும் ஹேமாஸ் நிறுவனம் அத்தோடு நிறுத்திவிடாமல், தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை வெற்றிக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு பல்வேறு வழிகளில் நிதி அனுசரணைகளை வழங்கி அவர்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.