2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் அகர்வுட் செய்கையில் முதலீடு செய்வதற்கான சிறந்த தெரிவு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 31 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


அகர்வுட்டிற்கான உயர் கேள்வி மற்றும் புதிய நிறுவனங்களின் வருகை ஆகியவற்றுடன், பொதுமக்கள் தாம்; எவராலும் ஏமாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தங்களது முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான முறையான நடைமுறைகள் மற்றும் சட்ட செயற்பாடுகள் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டியமை கட்டாயமானதாகும்' என சதாஹரித பிளாண்டேஷன் லிமிடெட்டின் தலைவர் சதீஷ் நவரத்ன குறிப்பிட்டுள்ளார்.
 
வல்லப்பட்டை மரங்களுக்கான உள்நாட்டு சட்டத்திற்கமைய, அகர்வுட் அறுவடை அல்லது ஏதேனும் முறையில் இம் மரங்களை வெட்டுதல் முற்றுமுழுதாக தடை செய்யப்பட்டுள்ளது. வல்லப்பட்டை மரங்களைப் போன்ற இதே குடும்பத்தைச் (Thymelaeaceae) சேர்ந்த 'எகியுலேரியா க்ரஸ்னா' அதிகளவு அகர்வுட்டினை உற்பத்தி செய்வதுடன், வணிக நோக்கிலான உயர்தரம் வாய்ந்த அகர்வுட்டினையும் உற்பத்தி செய்து வருகிறது. இலங்கையில் இந்த வாய்ப்பு சதாஹரித மூலம் அறிமுகம் செய்துள்ளதுடன், இலங்கையில் அகர்வுட் உற்பத்திக்கான பிரத்தியேக காப்புரிமையை கொண்டுள்ள ஒரேயொரு நிறுவனம் சதாஹரித ஆகும்.
 
வணிக ரீதியிலான அகர்வுட் செய்கையின் சிறந்த முறைக்கான காப்புரிமைமையை அமெரிக்காவின் மின்னேசொடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரொபர்ட் பிளான்செட்டே  வடிவமைத்துள்ளார். CAKit முறைக்கான பிரத்தியேக காப்புரிமையை இலங்கையில் சதாஹரித மட்டுமே கொண்டுள்ளது. இயற்கை முறையிலான அகர்வுட் செய்கையின் மூலம் 1-2% ஆன பெறுபேறுகளையும், பேராசிரியர். பிளான்செட்டேவினால் வடிவமைக்கப்பட்டதும், சதாஹரிதவினால் பின்பற்றப்படுவதுமான முறைக்கமைய ஒவ்வொரு மரத்திலிருந்தும் 60-75% ஆன பெறுபேறுகளையும் பெற்றுக்கொள்ள முடிகிறது. சட்ட ரீதியற்ற அகர்வுட் வியாபாரத்திலும், காப்புரிமை அதிகாரத்தையும் மீறும் பல நிறுவனங்கள் உலகளவில் பல்வேறு சட்ட ரீதியான விளைவுகளை சந்தித்துள்ளன.
 
உலகளவில் விலையுயர்ந்த வாசணைத் திரவியங்களின் உற்பத்தியில் முக்கிய மூலப்பொருளாகவும், மருந்து வகைகளிலும் அகர்வுட் பயன்படுத்தப்படுகிறது. வணிக ரீதியான அகர்வுட் உற்பத்திக்கான மிகப்பெரிய கன்றுகள் வளர்ப்பு பண்ணையை கொண்டுள்ள ஒரேயொரு நிறுவனமாக சதாஹரித திகழ்வதுடன், உயர்தரமானதும், வணிக ரீதியானதுமான அகர்வுட்டினை உற்பத்தி செய்யும் விதைகளை சட்ட ரீதியான இறக்குமதியாளராகவும் உள்ளது. வியட்நாமிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த விதைகள் இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் விவசாய திணைக்களம் மூலம் அங்கீகரிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்டுள்ளன. 
 
சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம், உலகின் மிகப்பெரிய சந்தனம் மற்றும் அகர்வுட் வர்த்தகரான அவுஸ்திரேலியாவின் Wescorp உடன் கைகோர்த்துள்ளது. இந்த ஒன்றிணைவு மூலம் சதாஹரித பிளாண்டேஷனுடன் இணையும் ஒவ்வொரு முதலீட்டாளரதும் முதலீட்டு திரும்பல்களுக்கான உத்தரவாதம் மேலும் பலப்படுத்தப்படுகிறது. முதலீட்டாளர் அவள்/ அவரின் முதலீடுகளுக்கான பெறுபேறுகளை பெறும் வரையான காலப்பகுதியில் சதாஹரித மூலம் இலவச சேவைகள், தொழில்நுட்ப அணியினரின் விஜயங்கள் மற்றும விரிவான தனிநபர் கண்காணிப்பு முறைமை கொண்ட வழிகாட்டல் புத்தகம் போன்றவற்றை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர் பராமரிப்பு அழைப்பு சேவையானது ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனது முதலீட்டு பெறுபேறுகளை பெறும் வரையான காலப்பகுதியில் எந்தவொரு நாளிலும் எந்தவொரு தகவல்களையும் வழங்க தயாராகவுள்ளது.
இதுவரை எந்தவொரு வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் பெறாத சதாஹரித பிளாண்டேஷன் நிறுவனம் இலங்கையில் அகர்வுட் முதலீட்டிற்கான சிறந்த தெரிவாக காணப்படுகிறது. இலங்கையில் அகர்வுட் செய்கை மற்றும் வனவளர்ப்பு ஆராய்;சிகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு பங்காளராக சதாஹரித காணப்படுகிறது. அகர்வுட் செய்கைக்கான புத்தாக்க தீர்வுகளை உருவாக்குவதிலும், இந்த ஆய்வுகளுடன் இணைந்து தேசிய வனவியலை தொடர்பில் சதாஹரித ஈடுபட்டு வருகின்றது.
 
இந்நிறுவனம் ISO தரச்சான்றை பெற்றுள்ளது என்பதுடன், 'தேசிய பச்சை விருதுகள் விழாவில் தங்க விருதை வென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கும் மேலாக சதாஹரித பிளான்டேஷன்ஸ் கம்பனி, வணிக ரீதியிலான வனச் செய்கையை முன்னெடுத்து வருகிறது. சூழலுக்கு பாதுகாப்பான திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.
 
பிளாண்டேஷன் துறையில் பெறுமதி வாய்ந்த முதலீட்டு வாய்ப்பினை வழங்கும் நிறுவனம் எனும் ரீதியில், சதாஹரித நிறுவனம் பொதுமக்கள் விழிப்புணர்வுகளை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதற்கு மேலதிகமாக, காப்புரிமைக்கு எதிரான முறையில் எவரேனும் அகர்வுட் செய்கையில் ஈடுபட்டு வந்தால் அதற்கு எதிரான சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் சதாஹரித முன்னெடுத்து வருகிறது.
 
மேலதிக தகவல்களை அறிய http://sadaharitha.com/ க்கு பிரவேசியுங்கள் அல்லது சதாஹரிதவின் ஹொட்லைன் - (0)11 5234000 க்கு அழையுங்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X