2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நொரிடேக் நிறுவன தலைவர் இலங்கை விஜயம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 31 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பான் நொரிடேக் கம்பனி லிமிட்டெட் தலைவர் ஹிரோஷி ரனிமுரா, ஜப்பான் நொரிடேக் கம்பனி லிமிட்டெட் பணிப்பாளரும் முகாமைத்துவ நிறைவேற்று அதிகாரியுமான கொசோ கடோவுடன் இணைந்து அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த குறுங்கால பயணத்தின் போது நொரிடேக் லங்கா போர்சிலைன் பிரைவேட் லிமிட்டெட் (NLPL) நிறுவனத்தின் பிரதித் தலைவரும் முகாமைத்துவ பணிப்பாளருமான யொசினரி சிமாயா உள்ளடங்கலாக, கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றுகின்ற கம்பனியின் அதிகாரிகள் மற்றும் உயர் முகாமைத்துவ அதிகாரிகளை திரு. ரனிமுரா சந்தித்ததுடன் இலங்கையில் நொரிடேக் லங்கா நிறுவனம் அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் அதனது தொழிற்;பாடுகள் பற்றியும் ஆராய்ந்தார்.  
 
தனது வேலைப்பழு நிறைந்த பயணத்திற்கு மத்தியிலும் திரு. ரனிமுரா, கொழும்பு 07 தர்மபால மாவத்தையில் அமைந்துள்ள ஆசியாவின் நொரிடேக் முதன்மை விற்பனை நிலையத்திற்கு விஜயம் செய்வதற்கும் நேரம் ஒதுக்கினார்.  தர்மபால மாவத்தை மற்றும் சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஆகியவை சந்திக்கும் இடத்தில் (அதாவது பித்தள சந்தியில்) உபாய ரீதியாக நிறுவப்பட்டுள்ள இந்த முதன்மை விற்பனை நிலையம், மூன்று மாடிகளை கொண்டிருக்கின்ற அதேவேளை வெளிப்புறத்;திலிருந்து அதனை தெளிவாக பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அண்மையில் இந்நிலையம் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் நொரிடேக்கின் உயர்வகுப்பு சந்தையுடனும் அதேபோன்று டோக்கியோ, நகோயா மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களில் அமைந்திருக்கும் இதுபோன்ற ஏனைய சர்வதேச சங்கிலித்தொடர் காட்சியறைகளுடனும் கொழும்பு இணைந்து கொண்டுள்ளது.
 
வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஜப்பான் பிரதமர் சின்ஸோ அபே அவர்களோடு இலங்கைக்கு வந்த உயர்மட்ட வர்த்தக தூதுக்குழுவில் ஒருவராக திரு. ரனிமுரா இடம்பிடித்திருந்தார். கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை – ஜப்பான் வர்த்தக மன்றத்திலும் இவர் பங்குபற்றினார். கடந்த இரு மாதங்களுக்குள் ஜப்பான் நொரிடேக் நிறுவனத்தில் இருந்து மிக முக்கிய பிரமுகர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயமாக திரு. ரனிமுராவின் இலங்கைப் பயணம் அமைகின்றது. நொரிடேக் குழுமத்தின் தலைவர் திரு. ரி. ஒகுரா அண்மையில் இலங்கைக்கு வருகைதந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் சந்தித்துச் சென்ற சூடாற முன்னமே திரு. ரனிமுராவும் விஜயம் செய்திருக்கின்றார். 
 
நொரிடேக் நிறுவனத்தின் கிட்டத்தட்ட 80% உள்நாட்டு உற்பத்திகள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் உள்ள முக்கியமான சந்தைகள் பலவற்றுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இவ்வாறான சந்தைகளுள் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், ஜப்பான், மத்திய கிழக்கு, அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மனி, மெக்ஸிகோ மற்றும் கொரியா போன்றவையும் உள்ளடங்கும். மீதமுள்ள 20% உற்பத்திகளும் கிருலப்பனை, வத்தளை, மாத்தளை, பன்னல மற்றும் பண்டாரநாயக்க விமான நிலையம் ஆகிய இடங்களிலுள்ள காட்சியறைகள் ஊடாக உள்நாட்டில் சந்தைப்படுத்தப்படுகின்றன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X