
இலங்கை நிறுவனமான ஹேமாஸ், இலங்கை நுகர்வோரின்; தேவைகள் மற்றும் அபிலாஷைகள் குறித்து நன்குணர்ந்துள்ளது. முன்னர் சலவைத்தூள் என்பது மிகவும் ஆடம்பரமானதாக கருதப்பட்டது. ஹேமாஸ் நிறுவனம் கடந்த 2003ஆம் ஆண்டில் வாடிக்கையாளருக்கு பொருளாதார ரீதியிலான சலவைத்தூளினை அறிமுகம் செய்து இலங்கை சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. தீவாவானது அழுக்குகளை விரைவாகவும், குறைந்த முயற்சியுடனும் அகற்றி சலவையை எளிதாகவும், குறைந்த நேரமாகவும் மாற்றமடையச் செய்திருந்தது.
கடந்த காலங்களில், நுகர்வோர் சவர்க்காரப் பாவனையிலிருந்து விடுபட்டு சலவைத்தூளினை பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து தீவாவின் சந்தைப் பங்கு மிக வேகமான வளர்ச்சி கண்டது. சௌகரியம், தரம் மற்றும் சிறந்த பெறுமதி காரணமாக மிகக் குறுகிய காலத்தில் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை தீவா உருவாக்கியிருந்தது. காணியொன்றை சொந்தமாக்கிக் கொள்வது என்பது மில்லியன் கணக்கான இலங்கையரின் கனவு என்பதை தீவா நன்குணர்ந்துள்ளது. ஆகவே, அதன் விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுடனான ஒன்றிணைவின் பின்னர், தீவா காணி ஊக்குவிப்பு திட்டம் மூலம் தமது வாடிக்கையாளர்களின் கனவினை நிஜமாக்குவதில் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தது.
கடந்த 2011ஆம் ஆண்டில் 'வட்டத்துக்கு காணி' எனும் தீவா ஊக்குவிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் வெற்றியாளர்களுக்கு கொழும்புக்கு அருகாமையில் பெறுமதி வாய்ந்த காணித்துண்டுகள் வெகுமதியாக வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டில் இதனையொத்த 'நுவனக்காரியன்ட ஹிடமக்' எனும் கருப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தில் தீவா வாடிக்கையாளர்கள் பங்குபற்றியதுடன், கொழும்புக்கு அருகாமையில் 3 காணித்துண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த வருடம், தீவா மீண்டும் ஒரு தடவை 'புதையலுடன் காணி' எனும் மாபெரும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுத்த வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தினூடாக வெற்றியீட்டியவர்களுக்கு கொழும்பை அண்மித்து 4 பெறுமதியான காணித்துண்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தீவா அதன் பெறுமதிமிக்க வாடிக்கையாளருக்கு இதுவரை 16 காணித்துண்டுகளை வெகுமதியாக வழங்கியுள்ளது. இத் திட்டம் புகழ் பெற்றதை தொடர்ந்து, தீவா அதன் வாடிக்கையாளருக்கு அதிகளவிலான பரிசில்களை வழங்கும் முகமாக குளிர்சாதனப் பெட்டிகள், மோட்டர் சைக்கிள்கள் மற்றும் பணப்பரிசில்கள் போன்ற வெகுமதிகளையும் வழங்கியிருந்தது.
இந்த வருடம், தீவா 'காணி அதிர்ஷ்டம்' ஊக்குவிப்பு திட்டம் மே மாதம் முதல் ஒகஸ்ட் மாதம் வரை முன்னெடுக்கப்பட்டது. இதனூடாக ஐந்து அதிர்ஷ்டசாலி தீவா வாடிக்கையாளர்கள் கொழும்புக்கு அருகாமையில் காணியொன்றை சொந்தமாக்கி கொள்ளும் கனவினை நனவாக்கிக் கொண்டனர். ஒவ்வொன்றும் 1 மில்லியன் பெறுமதியான காணித்துண்டுகளை உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசந்த வீரசிங்க, பெரலபனதரவைச் சேர்ந்த சமீர சம்பத், தலபே பி.எச்.சந்திரா, கொட்டுகொட சிசிர மற்றும் திகன பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.பி. ராஜபக்ஷ ஆகியோராவர்.
வாடிக்கையாளர் வாழ்க்கையை மேம்படுத்தும் ஹேமாஸ் நிறுவனத்தின் நோக்கத்துடன், நாளாந்தம் 10,000 ரூபா பெறுமதியான பணப்பரிசில்களுக்கு மேலதிகமாக, இம்முறை 18 அதிர்ஷ்டசாலிகளுக்கு தங்க நாணயங்;களும் வெகுமதியாக வழங்கப்பட்டன. வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது
'குடும்பத்தலைவி எனும் ரீதியில், எனது தினசரி தேவைகளுக்காக பொருட்களை தெரிவு செய்யும் போது பணத்திற்கு பெறுமதியான பொருளினையே தேர்ந்தெடுப்பேன். அதனால் தான் நான் தீவாவை தெரிவு செய்தேன். தீவா ஊடாக எனது நேரம், வேலைச்சுமை மற்றும் பணத்தை சேமிக்க முடிந்தது. இன்று எனக்கு பெறுமதியான பரிசொன்று கிடைத்துள்ளது. தீவா தெரிவு செய்தமை சரியான தீர்மானம் என நான் உணர்கின்றேன்' என காணி வெற்றியாளரான உடுபத்தாவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசந்தா வீரசிங்க தெரிவித்தார்.
'8 வருடங்களுக்கும் மேலாக நான் வாடகை வீட்டிலேயே வசித்து வந்தேன். காணியொன்றை வாங்குவதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க எனது மனைவி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். எனது ஒரேயொரு குழந்தையும் என் உறவினர் வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றார். இப்போது இந்த காணியுடன் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக வாழ முடியும்' என மற்றுமொரு வெற்றியாளரான கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த சிசிர ஆனந்த பெரோ தெரிவித்தார்.
'கடந்த நான்கு வருடங்களாக தீவா அதன் விசுவாசமிக்க வாடிக்கையாளருக்கு 16 காணித்துண்டுகளை கையளித்துள்ளது. எமது வாடிக்கையாளர்களின் வாழ்வை மேம்படுத்த உதவிடும் இந்த முயற்சியின் பங்காளராக உள்ளமை எமக்கு பெருமையளிக்கிறது. இந்த முயற்சி ஹேமாஸ் பிஎல்சி நிறுவனக் குறிக்கோளின் ஓர் அங்கமாகும். ஆண்டுதோறும் அதிகரித்து செல்லும் வாடிக்கையாளர் வரவேற்பானது வாடிக்கையாளர்களுடனான எமது தொடர்பினை உறுதி செய்வதாக அமைந்துள்ளது' என ஹேமாஸ் FMCG இன் தீவா வர்த்தகநாம முகாமையாளர் ஷானக பெர்னாண்டோ தெரிவித்தார்.
தீவா வர்த்தகநாமமானது மேலுமொரு வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தை 2015 இல் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. தீவாவின் விசுவாசமிக்க வாடிக்கையாளர் தற்போதிலிருந்தே தீவா வெற்றுப் பக்கற்றுகளை சேகரிக்க தொடங்கலாம். ஆகவே இந்த புகழ்பெற்ற வாடிக்கையாளர் ஊக்குவிப்பு திட்டத்தில் பங்குபற்றி தங்கள் கனவினை நனவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பை பெற முடியும்.