
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான பிளென்டி ஃபூட்ஸ் நிறுவனத்தின் முன்னணி தானிய ஆகார வர்த்தகநாமமான சமபோஷ, தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டாக 'சமபோஷ 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டித்தொடர் 2014' க்கு அனுசரணை வழங்குகிறது. இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போட்டி ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டிகளில்;; 300 ஆண்கள் அணிகளையும், 100 பெண்கள் அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடு முழுவதுமிருந்து 400 பாடசாலைகளைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்குபற்றவுள்ளனர். முதற்கட்ட சுற்று போட்டிகள் நாடுபூராகவும் உள்ள 30 நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 32 ஆண்கள் அணியினர் மற்றும் 24 பெண்கள் அணிகள் பங்கேற்கவுள்ள இறுதிச்சுற்று போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியிலிருந்து 10 ஆம் திகதி வரை களுத்துறை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இப் போட்டிகளில் போட்டித்தொடரின் சிறந்த ஆண் மற்றும் பெண் வீர வீராங்கனை விருது மற்றும் சிறந்த கோல் காப்பாளர் விருது போன்றன வழங்கப்படவுள்ளன.
இந்த போட்டி விபரங்கள் குறித்து இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ரன்ஜித் ரொட்ரிகோ கருத்து தெரிவிக்கையில், 'கால்பந்தாட்ட நட்சத்திரங்களை அடையாளம் காணும் நோக்கில், சினேகபூர்வமாகவும், அதேவேளை போட்டிகரமானதாகவும் 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையேயான போட்டி ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த போட்டித்தொடர் மூலம் இளம் விளையாட்டு வீரர்கள் உந்துசக்தியுடன் போட்டியிடுவதற்கான ஆதவினை வழங்கும் வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. நாடுபூராகவும் உள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த பிளென்டி ஃபூட்ஸ் குழுவிற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்' என்றார்.
எதிர்கால தலைமுறையினரிடையே போசாக்கு மூலம் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் சமபோஷ, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 15 வயதுக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டிக்கு அனுசரணை வழங்குவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றது. பாடசாலை மாணவர்களிடையே போசாக்கு தரத்தை மேம்படுத்தும் எமது முயற்சிகளின் ஓர் அங்கமாக, எதிர்வரும் ஆண்டுகளில் பல்வேறு கால்பந்தாட்ட போட்டிகளுக்கு அனுசரணை வழங்க எண்ணியுள்ளோம்' என பிளென்டி ஃபூட்ஸ்(பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், பணிப்பாளருமான ஷம்மி கருணாரத்ன தெரிவித்தார்.
கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கிடையேயான கால்பந்தாட்ட போட்டித்தொடரில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியும், பெண்கள் பிரிவில் மலியதேவ வித்தியாலயமும் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தன.
இந்த பங்காண்மை குறித்து சிலோன் பிஸ்கட்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் தேஜா பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'கால்பந்தாட்டம் என்பது உலகம் முழுவதும் மிகப் பிரபல்யமான விளையாட்டாகும். இவை அனைத்துமே கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை பற்றியதாகும். இதற்கு சீரான ஊட்டச்சத்து தேவைப்படுவதுடன், அவை சமபோஷ தயாரிப்பில் உள்ளடங்கியுள்ளமை விசேட அம்சமாகும். பால், முட்டை, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றில் அத்தியாவசிய புரதங்கள், காபோவைதரேற்றுகள் மற்றும் விற்றமின்கள் அடங்கியுள்ளன. இருப்பினும், இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சமபோஷ தானிய ஆகாரத்தில் உள்ளடங்கியுள்ளன. இது விளையாட்டு வீரர்களுக்கான சௌகரியமானதும், ஆரோக்கியமானதுமான ஆகாரமாக விளங்குகிறது' என்றார்.