.jpg)
எச்ஐவி மற்றும் எயிட்ஸ் தொடர்பான இலங்கை வர்த்தக ஒன்றிணைவு (LBCH) அமைப்பின் புதிய தலைவியாக நதீஜா தம்பையா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய தலைவர் தெரிவு கடந்த வாரம் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. நதீஜா தம்பையா ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களுக்கான தலைமை அதிகாரியாக கடமையாற்றி வருகிறார்.
இலங்கையில் வாராந்தம் 2 புதிய எச்ஐவி தொற்றுக்கள் பதிவு செய்யப்படுவதன் காரணமாக எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கம் பரவுவதை தடுக்க வேண்டியமை கட்டாயத் தேவையாகும் என இந்த செயலமர்வின் போது LBCH தெரிவித்திருந்தது. இந்த வருடாந்த செயலமர்வில் தமது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையில் 50 க்கும் அதிகமான மிகச்சிறந்த கூட்டாண்மை நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
தேசிய HIV/AIDS கட்டுப்பாட்டு திட்டத்தின் பால்வினை ஆலோசகர், வைத்தியர் கே.ஏ.எம்.ஆரியரட்ன அவர்கள், இலங்கையிலும், உலகளவிலும் பரவி வரும் எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்த்தாக்கத்தின் தற்போதைய நிலைமை குறித்த விளக்கங்களை வழங்கியிருந்தார்.
இலங்கையில் எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் 16 வயது முதல் 49 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால், இந்த நோய்த்தாக்கம் சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் மீது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே தொழில் புரியும் மக்கள் மத்தியில் இந்த விடயம் குறித்து தெளிவுபடுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் முன்னெடுக்கப்பட வேண்டியமை கட்டாயமாகும் என ஆரியரட்ன தெரிவித்தார்.
LBCH இன் அங்கத்துவ நிறுவனங்களுள் சிட்டி பேங்க், சிலோன் டுபாக்கோ நிறுவனம், டொயிஷ் வங்கி> அக்சஸ் என்ஜினியரிங், சன்ஷைன் ஹோல்டிங்ஸ், செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, DFCC வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி மற்றும் எடிசலாட் போன்ற நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.