2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இனி ஒன்லைன் ஊடாக வாகன பதிவுகள் மற்றும் உரிமை மாற்றங்கள்

A.P.Mathan   / 2014 நவம்பர் 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்லைன் மூலமாக வாகன பதிவுகள் மற்றும் உரிமை மாற்றங்கள் செய்யக்கூடிய வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக இலங்கை போக்குவரத்து திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.
 
ஒன்லைன் மூலமாக மோட்டார் சைக்கிள்களை பதிதல் மற்றும் உரிமை மாற்றும் நடைமுறை ஹம்பாந்தோட்டை, குருநாகல் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய பகுதிகளுக்கும் இந்த சேவை விஸ்தரிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
 
இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர், வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களை பதிவு செய்வது மற்றும் உரிமை மாற்றுவது தொடர்பான கோரிக்கைகளை மேற்கொள்ள முடியும். இது இலகுவானது மற்றும் விரைவானது. பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நாராஹேன்பிட்டியவிலுள்ள மோட்டார் வாகன திணைக்களத்துக்கு விஜயம் செய்ய வேண்டிய தேவை இதன் மூலம் குறைக்கப்படும். 
 
இந்த சேவையை முன்னெடுக்கக்கூடிய வகையில் சகல தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிட்ட ஹரிஸ்சந்திர, உடலால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் கணனி மயப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X