2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்துக்கு தனது சேவையை விஸ்தரித்துள்ள ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ்

A.P.Mathan   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் பிஎல்சி தனது புதிய கிளையை யாழ்ப்பாணத்தில் திறந்துள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாண பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனது நிபுணத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்க ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் முன்வந்துள்ளது. இல. 102, பலாலி வீதி, திருநெல்வேலி எனும் முகவரியில் தனது புதிய கிளையை நிறுவியுள்ளது. இந்த கிளையில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் பணியாற்றுவதுடன், நவீன வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
 
இந்த கிளையின் அங்குரார்ப்பண நிகழ்வின் பிரதம அதிதியாக ஏசியன் அலையன்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஆயுள் பிரிவுக்கான பிரதம செயற்பாட்டு அதிகாரி சுலா ஹெட்டியாரச்சி கலந்து கொண்டிருந்ததுடன், ஆயுள் விற்பனை முகாமைத்துவ அணியினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X