
உலகின் புகழ்மிக்க குலோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை அண்மையில் அமானா வங்கியை உலகின் முன்னேறிவரும் மிகச் சிறந்த வங்கியாக அங்கீகரித்து விருதை வழங்கியுள்ளது. அமெரிக்காவின் வொஷpங்டன் நகரில் நடைபெற்ற 2014ம் ஆண்டுக்கான 18 ஆவது வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகள் விருது விழாவில் குலோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து இந்த விருதை அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் பெற்றுக் கொண்டார். அதே இடத்தில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டுக்கு இந்த விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குலோபல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் வருடாந்த உலகின் மிகச் சிறந்த வங்கிகள் விருது விழாவில் மிகச் சிறந்த மத்திய வங்கிகள், மிகச் சிறந்த இஸ்லாமிய நிதி நிறுவனங்கள், மிகச் சிறந்த முதலீட்டு வங்கிகள், உலகின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள், நாட்டின், பிராந்தியத்தின் மற்றும் உலகின் மிகச் சிறந்த வங்கிகள் என வகைப்படுத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன. உலகின் முன்னேறிவரும் இஸ்லாமிய வங்கிக்கான விருதை வென்றதற்கு மேலதிகமாக, அமானா வங்கி நாட்டு விருதுப் பிரிவின் கீழ் இலங்கையின் மிகச் சிறந்த இஸ்லாமிய நிதி நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டது.
விருது விழாவில் விருதை பெற்றுக்கொண்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மத் அஸ்மீர் அவர்கள் ' நாம் உண்மையில் இந்த விருதின் மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளோம். இலங்கையில் இயங்கிவரும் அமானா வங்கி உலகின் முன்னேறிவரும் மிகச் சிறந்த இஸ்லாமிய வங்கியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையானது மொத்த சனத்தொகையில் 10 சதவீதத்தை மாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு நாட்டில் உண்மையில் முக்கியமான ஒரு விடயமாகும். 2011ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திலிருந்து இயங்கிவரும் எமது வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் இஸ்லாமிய வங்கி முறையினால் வழங்கப்படும் பிரத்தியேக திட்டங்களை முன்வைக்கும் விடயத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பெருமைமிக்க விருதையும், அங்கீகாரத்தையும் ஈட்டியிருப்பதற்கு மேலதிகமாக அமானா வங்கியில் நாம் கண்டுள்ள மிகச்சிறந்த வளர்ச்சிக்கு இது துணைபுரிந்துள்ளது' என்றார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட திரு. அஸ்மீர் அவர்கள் ' எமது வாடிக்கையாளர்கள் எம்மீது கொண்டுள்ள அதீத நம்பிக்கையின் பிரதிபலனே இந்த முன்னேற்றமாகும். வங்கியையும், அதன் பிரத்தியேக முறையையும் முழு அளவில் முன்னெடுத்துச் செல்வதற்காக பணிப்பாளர்கள் சபையின் வழிகாட்டலுடன் வங்கியின் ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியர் முதல் நிறுவன முகாமைத்துவம் வரை கூட்டுப் பணியாக, அர்ப்பணிப்புடன் செயற்பட்டதனால் மக்களின் நம்பிக்கையை வெல்ல முடிந்துள்ளது. அனைத்து பங்காளிகளிடம் இருந்தும் கிடைக்கப்பெற்றுள்ள ஆதரiவும், பலத்தையும் கொண்டு நாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு துணைபுரிந்து வாழ்க்கையை வளமூட்டும் வண்ணம் பொருளாதாரத்தில் ஒரு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்தும் பலமாக காலடி எடுத்து வைப்போம்.' என்று குறிப்பிட்டார்.
அமானா வங்கிக்கு கிடைத்துள்ள இந்த இரண்டு விருதுகளும், வங்கி கடந்த சில வருடங்களில் காட்டியுள்ள வளர்ச்சியை பிரதிபலிக்கின்றது. 2013ம் ஆண்டில் தொழில் வளர்ச்சி வீதம் 8.8மூ ஆக காட்டியபோது வாடிக்கையாளர்களுக்கான நிதயுதவி மூன்றிலக்க பெருமானத்தை அடைந்து 109.6 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கான நிதிகளில் ஆண்டின் முதல் 2 காலாண்டுக்குள் 0.45மூ மறைப்பெறுமான வளர்ச்சியை கண்டபோதிலும், 2014ம் ஆண்டின் தொழில் வளர்ச்சியையும் தாண்டி முதல் 3ம் காலாண்டில் 31% வளர்ச்சியை கண்டுள்ளது. புதிய உற்பத்திகளும். சேவைகளும் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, வங்கியின் வைப்பு அளவு 2013ம் ஆண்டில் 35.2% ஆகவும், 2014ம் ஆண்டின் முதல் 3 காலாண்டுகளில் 46.3% ஆகவும் வளர்ச்சி கண்டுள்ளது. அதேபோல், 2013ம் ஆண்டில் தொழில் வளர்ச்சி வீதம் 15% ஆகவும், 2014ம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 5% ஆகவும் காணப்பட்டது. இதற்கமைய, வங்கியின் வைப்புத் தொகை தொழில் வளர்ச்சி வீதத்தையும் தாண்டியிருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள வங்கியாளர்கள், நிறுவன நிநி நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் பகுப்பாய்வாளர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய ஒரு சரியான செயன்முறையின் ஊடாகவே அனைத்து குலோபல் ஃபைனான்ஸ் விருதுகளுக்கும் உரிய வெற்றியாளர்களும் தெரிவு செய்யப்படுகின்றனர். குலோபல் ஃபைனான்ஸ் என்பது 1987ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு மாதாந்த சஞ்சிகையாகும். 163 நாடுகளில் 50,000 இற்கும் மேற்பட்ட பிரதிகள் மாதாந்தம் விற்பனையாகின்றன. நியுயோர்க்கில் தனது தலைமையகத்தை கொண்டு இயங்கும் இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் லன்டன், ரியோ டி ஜெனீரோ, மிலான் போன்ற நகரங்களில் காணப்படுகின்றன.
வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது உத்தரவு பெற்ற வர்த்தக வங்கியே அமானா வங்கியாகும். தனது மூலோபாய பங்காளிகளான மலேஷpயா பேர்ஹாட் இஸ்லாமிய வங்கி, சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி, பங்களதேஷpன் ஏ.பீ. வங்கி ஆகியவற்றின் மூலம் ஊக்குவிக்கப்பட்டுள்ள அமானா வங்கி இலங்கையின் வங்கித் துறைக்குள் ஒரு புதிய பாதையை உருவாக்கி வருவதோடு, நாடு பூராகவும் வளர்ந்து வரும் ஒரு பிரத்தியேக வங்கி முறைக்கான சந்தை வாய்ப்பில் தமது மூலதனத்தை மையப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றது.