.jpg)
மோல்டட் ஆகார பான உற்பத்திகள் மத்தியில் இந்நாட்டில் புகழ்பெற்ற வர்த்தகநாமமான வீவா ஆனது 'வீவா ஜின்ஜர்' எனும் புதிய ஆகார பானத்தை அறிமுகம் செய்து மோல்டட் உற்பத்தி சந்தையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய 'வீவா ஜின்ஜர்' உற்பத்தியில் பால் மற்றும் மோல்ட்; நலச்செழுமை மற்றும் இஞ்சி சுவை ஆகியன உள்ளடங்கியுள்ளமையால் இலங்கையரின் தேநீர் மேசையில் முக்கிய பானமாக மாற்றமடைந்துள்ளது. சம்பிரதாயமான மோல்டட் பானத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை 'வீவா ஜின்ஜர்' வழங்குகிறது.
'புதிய வீவா ஜின்ஜர் தயாரிப்பானது வாடிக்கையாளருக்கு எழுச்சியூட்டும், சுவையான மோல்டட் ஆகார பானத்தை வழங்குகிறது. சம்பிரதாய தேநீர் கோப்பையில் மோல்டட் சுவையை சேர்த்த நாம் தற்போது இஞ்சி சுவையினையும் சேர்த்து தேநீர் அருந்துவதை புதிய அனுபவமாக மாற்றமடையச் செய்துள்ளோம். இந்த புதிய அனுபவத்தை பெற்றிட வாடிக்கையாளர்கள் தமது வழக்கமான தேநீர் கோப்பையில் வீவா ஜின்ஜர் சுவை சேர்க்க வேண்டியது மாத்திரமே உள்ளது' என GSK நிறுவனத்தின் வர்த்தகநாம பிரிவின் முகாமையாளர் தர்ஷன ஜயசிங்க தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக எவ்வித மாற்றங்களும் ஏற்படாத மோல்டட் ஆகார பான சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி வாடிக்கையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட வீவா ஜின்ஜர் குறித்து GSK நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ரவிந்த்ர டி கூங்கே கருத்து தெரிவிக்கையில், 'வீவா மோல்டட் பானத்திலிருந்து கிடைக்கும் ஆற்றல் மற்றும் அற்புதமான இஞ்சி சுவை ஆகியன வழக்கமான தேநீர் கோப்பையை மகிழ்ச்சியான வசதியான அனுபவமாக மாற்றமடையச் செய்கிறது' என்றார்.
வீவா பேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து இந்த புதிய உற்பத்தியை இந்நாட்டில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக, இந்த புதிய ஜின்ஜர் சுவையுள்ள மோல்டட் ஆகார பானத்தின் சுவையை ருசிப்பதற்கு வாடிக்கையாளருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் நடமாடும் ஊக்குவிப்பு வண்டி நாடு முழுவதும் பயணிக்கவுள்ளது. பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடாக நாடுபூராகவும் உள்ள வாடிக்கையாளர்களின் புத்துணர்ச்சியூட்டும் தருணங்களுடன் இணைந்திருக்க புதிய வீவா ஜின்ஜர் எதிர்பார்த்துள்ளது.
வீவா என்பது க்ளெக்சோஸ்மித்கிளைன் நிறுவனத்தின் உற்பத்தி ஆகும். மக்களிற்கு சிறந்த உணர்வையும், நீண்ட ஆயுளையும் ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் உலகின் முன்னணி ஆராய்ச்சி அடிப்படையிலான மருத்துவ மற்றும் சுகாதார பாதுகாப்பு நிறுவனமாக க்ளெக்சோஸ்மித்கிளைன் நிறுவனம் விளங்குகிறது.
ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திறன்களை தன்வசம் கொண்டுள்ள GSK நிறுவனமானது விசேடமாக இலங்கையர்களின் தேவைகளுக்கு பொருத்தமான இஞ்சி சுவை கொண்ட மோல்டட் ஆகார பானத்தை உற்பத்தி செய்துள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)