2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை அரச தலையீட்டை எதிர்நோக்கலாம்

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் அரசியல் உறுதியற்ற நிலை காரணமாக, கடந்த இரு வாரங்களாக தளம்பல் நிலையை எதிர்நோக்கியுள்ள கொழும்பு பங்குச்சந்தையில் அரசாங்கத்தின் தலையீட்டை எதிர்நோக்கலாம் என பங்கு முகவர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
 
முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடுவது தொடர்பிலான அறிவித்தலை வெளியிட்டிருந்ததிலிருந்து அனைத்து பங்கு விலைச்சுட்டெண் மற்றும் S&P SL 20 ஆகியன முறையே ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய பெறுமதிகளை பதிவு செய்து வருகிறது. 
 
இந்நிலையில் கொழும்பு பங்குச்சந்தையின் மீதும், அரசாங்கத்தின் மீதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் தலையீடு பங்குச்சந்தையில் பதிக்கப்படும் என பரந்தளவில் எதிர்பார்க்கப்படுவதாக பங்கு முகவர்களும், ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X