2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச விருது வழங்கல் நிகழ்வில் முடிசூட்டப்பட்ட ஹேமாஸ் பியவற

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 14 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஹேமாஸ் குழுமத்தின் பிரசித்தமான நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்னெடுப்பாய் திகழும் 'பியவற', கடந்த புதன்கிழமை (நவம்பர் 26ஆம் திகதி) சிங்கப்பூர் பெயார்மவுண்ட் ஹோட்டலில்  இடம்பெற்ற 'ஆசியா நிறுவன சிறப்புத்துவம் மற்றும் நிலைபேண்தன்மை விருதுகள் -2014' (ACES) எனும் விருது வழங்கல் நிகழ்வின் போது இரு உயரிய விருதுகளால் முடிசூட்டப்பட்டது. 
 
இந்நிகழ்வின்போது ஹேமாஸ் பியவற இரு பிரதான பிரிவுகளில் வென்றது. அவையாவன, 'ஆசியாவின் அதி உயரிய சமூகப்பொறுப்புள்ள நிறுவனம் - 2014' மற்றும் 'ஆண்டின் மிகச்சிறந்த நிறுவன சமூகப்பொறுப்புடைய பிரசாரம்' என்பனவாகும். இந்த விருதுகளுக்காய் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, இந்தியா, ஹொங்கொங் மற்றும் வியட்னாம் போன்ற நாடுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 
 
ஆசியாவில் நிலைபேண்தகு வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் மலேசியாவை தளமாகக்கொண்டு செயற்படும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனமான MORS குழுமம் ஏற்பாடு செய்த ACES விருது வழங்கல் நிகழ்வானது – ஆசியாவின் பிரசித்தம்பெற்ற நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் தலைமைத்துவம் மற்றும் நிறுவன சமூகப் பொறுப்பு பண்புகளை, அங்ககீரித்து பாராட்டும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  
 
அந்தவகையில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பியவற செயற்பாட்டின் ஊடாய், நாடு முழுவதுமுள்ள சிறுவர்களின் முன்பிள்ளை பராயத்தில் ஏற்படுத்தும் அபிவிருத்தியை அங்கீகரிக்கும் வகையிலேயே இந்த விருதுகள் அமையப்பெறுகின்றது. 
 
ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. குழும பணிப்பாளரும் ஹேமாஸ் ஒளட்றீச் அமைப்பின் தலைவருமான திரு. அப்பாஸ் யூசுப்ஃஅலி, 'பியவற'  தொடர்பில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகையில், 'இந்த மிகச் சிறப்பான விருதைப் பெற்றதன் மூலம் நாம் புளகாங்கிதமும் கௌரவமும் அடைந்திருக்கின்றோம். இவ் வெற்றிக்களிப்பு என்பது இம்முன்னெடுப்புடன் தொடர்புபட்ட அனைத்து பங்குதார தரப்பினருக்கும் பொதுவானதாகவும் அதேபோல் பகிரப்படும் ஒரு அனுபவமாகவும் அமைகின்றது. நாடெங்குமுள்ள  பியவற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்;, உறுதியாக எம்மோடு பங்காளியாக இணைந்து கொண்ட சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் அனைத்து அதிகாரிகள், அதேபோன்று இச் செயற்றிட்டத்துடன் இணைந்து செயற்பட்ட அனைத்து நன்கொடையாளர்கள் என பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவுக்கு மிக அதிகமான அனைவருடனும் இந்த வெற்றியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி' என்றார்.   
 
2002ஆம் ஆண்டில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட பியவற முன்னெடுப்பானது ஹேமாஸ் நிறுவனத்தின் முதன்மையான கூட்டாண்மை சமூகப் பொறுப்பு செயற்றிட்டமாக காணப்படுகின்றது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் சிறுவர் செயலகத்தின் பங்காளித்துவத்துடன் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. நாடு முழுவதும் சிறுவர் நட்புறவுமிக்க முன்பள்ளிப் பாடசாலைகளை நிறுவுவதன் ஊடாக முன்பிள்ளைப் பருவ கவனிப்பு மற்றும் அபிவிருத்தியை (ECCD) மையமாகக் கொண்ட அணுகுமுறையை இச்செயற்றிட்டம் கொண்டிருக்கின்றது.   
 
பியவற, சர்வதேச மற்றும் உள்நாட்டு விருதுகள் பலவற்றை வென்றுள்ளதுடன், வெற்றிகரமான ஆரம்பக் கல்விக்கு அடித்தளம் இடுவதனூடாய் 'உலகளாவிய ஆரம்பக் கல்வியை அடைந்து கொள்வதற்கான' ஐக்கிய நாடுகள் சபையின் மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளுக்கு அமைவானதாகவும் காணப்படுகின்றது. 'பியவற' ஆனது குழந்தைப் பருவத்தை கடந்து முன்பிள்ளைப் பருவத்திற்குச் சென்று, சிறுவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் நீடித்திருக்கின்ற கற்றலுக்கு அவசியமான உறுதிமிக்க அடித்தளத்தை அடைந்து கொள்வதற்கு உதவுகின்றது. ECCD ஆனது ஒரு சுகாதாரம்சார் காரணியை உள்வாங்கியதாக காணப்படுகின்ற அதேநேரத்தில் இலங்கையின் சுகாதார பராமரிப்பு துறையில் முன்னணியில் திகழ்கின்ற ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனம் இவ்வாறான செயற்றிட்டம் ஒன்றில் பங்கெடுத்துக்கொள்வதையிட்;டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றது.   
 
'பியவற எனும் எமது சமுதாய முதலீட்டு செயற்றிட்டமானது, பொறுப்புணர்வுமிக்க கூட்டாண்மை நிறுவனம் என்ற வகையிலும், ஒரு மனிதன் என்ற அடிப்படையிலும், ஆழமான, நிரந்தரமான செயல்நிறைவேற்றல் உணர்வை எமக்கு அளித்துள்ளது. சிறியதொரு பாடசாலையுடனும் இரு ஆசிரியர்கள் மற்றும் 20 சிறுவர்களோடும், பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்னர் குருணாகலையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம், தற்போது 100க்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 3000 மாணவர்களைக் கொண்ட 40 பாடசாலைகளை உள்ளடக்கியதாக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. பல்வேறுபட்ட இனக்குழுமங்கள், சமூக பிரிவுகள் மற்றும் பொருளாதார பின்னணிகளைக் கொண்ட சிறுவர்களின் வாழ்க்கையில் பியவற முன்னெடுப்பு குறிப்பிடத்தக்க, அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இது மாணவர்களுக்கு உறுதியானதொரு அடித்தளத்தை அளிப்பதுடன், எதிகாலத்தில் தமது பதின்ம வயதையும், வயதுக்கு வந்த பின்னரான காலத்தையும் எதிர்கொள்ளக்கூடியவாறு அவர்கள் வலுவூட்டத்தை அளிக்கின்றது. இதுவே பியவற செயற்றிட்டத்தின் உயரிய பண்பாகும்.;' என்று ஹேமாஸ் ஒளட்றீச் பஃவுண்டேசன் நிறைவேற்று பணிப்பாளரான சிரோமி மசக்கொறள தெரிவித்தார். இவரது மேற்பார்வையின் கீழேயே பியவற நிகழ்சச்சித் திட்டங்கள் மேற்கொளள்ப்படுகின்றன. 
 
கம்பனியுடன் தொடர்புபட்ட உள்ளக மற்றும் வெளியக பங்குதார தரப்பினர்களிடையே பியவற செயற்றிட்டமானது சாதகமான ஒரு முன்னெடுப்புத் திட்டமாக நிலைபெற்றுள்ளது. அதாவது இச்செயற்றிட்டம் தாக்கம் செலுத்துகின்ற அடிமட்ட சமுதாயங்கள் தொடக்கம் - அவர்கள் இணைந்து பணியாற்றுகின்ற விநியோகஸ்தர்கள் மற்றும் வணிக பங்காளிகள்; அவர்களோடு பங்காளியாக கைகோர்த்துள்ள அரசங்க அதிகார தரப்பினர் வரை அனைவர் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.   
 
இலங்கையின் முன்னணி கூட்டுநிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கின்ற ஹேமாஸ் குழுமமானது FMCG, சுகாதார பராமரிப்பு, போக்குவரத்து மற்றும் விடுமுறைகால ஏற்பாடுகள் போன்ற முக்கியமான நான்கு துறைகளை மையமாகக் கொண்டு வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .