2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களுக்காக அவுஸ்திரேலியா கேட்வே புதிய வீசாக்களை அறிமுகம் செய்கின்றது

A.P.Mathan   / 2014 டிசெம்பர் 23 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெல்பர்னை தளமாகக் கொண்டுள்ள இலங்கையின் முண்ணனி அவுஸ்திரேலிய குடிவரவு ஆலோசகர்களான – அவுஸ்திரேலியா கேட்வே - ஃபெயார்ஃபீல்ட் சட்டத்தரணிகள் அமைப்பு அவுஸ்திரேலியக் கண்டத்தில் சுமுகமான குடிவரவு வீசா திட்டத்தினூடாக முதலீடு, வர்த்தகம், மற்றும் குடிவரவு வாய்ப்புகளை  தீவரமாக ஊக்குவிக்கும் துறையி;ல் பிரவேசித்துள்ளது. 

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட அவுஸ்திரேலிய வர்த்தக புத்தாக்க, முதலீட்டு வீசா முறைமை அவுஸ்திரேலியாவில் முதலீடு செய்வதற்கும் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கும் மற்றும் அவுஸ்திரேலிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்கும் உத்தேசித்துள்ள வர்த்தக புத்தாக்கத்தினரையும் முதலீட்டாளர்களையும் வெற்றிகரமாக உள்வாங்குகிறது. இந்தத் திட்டம் இலங்கைத் தொழிவாண்மையாளர்களுக்கும்  வர்த்தகர்களுக்கும் போதியளவு வாய்ப்புகளை வழங்குவதாக மெல்பர்னில் பணிபுரியும் இலங்கையி;ன் முன்னணி குடிவரவு சட்ட ஆலோசகரான சுசந்த கட்டுகம்பல தெரிவிக்கின்றார்.

இந்த வீசா முறைமையானது மூன்று ஆரம்பப் பிரிவுகளைக்கொண்டது, அதாவது வெற்றிகரமாக வர்த்தகத் தொழிலை நடத்துவதுடன் தூய்மையானதும், யதார்த்தமானதுமான அர்ப்பணிப்புடன் புதிய ஒரு உரிமையாளராகவும்;; அவுஸ்திரேலியாவில் தற்போது வர்த்தக்கத்தில் ஈடுபடுபவர்களுக்குமான வர்த்தகப் புத்தாக்கப் பிரிவு, அவுஸ்திரேலியாவின் பிராந்தியங்களி;ல் உண்மையான அர்ப்பணிப்புடன் வெற்றிகரமான முதலீட்டை மேற்கொண்டு வர்த்தகத்தில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றவர்களுக்காக முதலீட்டாளர் பிரிவு, அவுஸ்திரேலியாவில் குறைந்தது ஐந்து மில்லியன் அவுஸ்திரேலியன் டொலர்களை முதலீடு செய்ய விரும்புவோர்களுக்கு கணிசமான முதலீட்டாளர் பிரிவு என்றும் வீசாக்கள் வழங்கப்படுகின்றன. 

புத்தாக்க வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும் வர்த்தகர்களும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் நிரந்தர வதிவிடத்தை அடைவதற்கான வழிகளை வர்த்தக புத்தாக்க மற்றும் முதலீட்டுத் திட்டம் இலகுபடுத்துகிறது. வர்த்தக புத்தாக்கப் பிரிவு வீசாவுக்கான தகைமைகளை பூர்த்தி செய்ததன் மூலம் தற்காலிக வீசாவை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் மாநில அரசாலோ அல்லது சமஸ்தான அரசாலோ பிரேரிக்கப்டும் பட்சத்தில் மேலும் ஈராண்டுகளுக்கு வீசாவை நீடிப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும். 

25 ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற சுசந்த கடுபம்பல மெல்பர்ன் மொனார்ஷ் பல்கலைக்கழகத்தில் தனது எல்.எல்.பி பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார். அதன் பின்னர் அவர் தெற்கு அவுஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றத்திலும் அதேபோன்று விக்டோரியா மாநிலத்திலும் மெல்பர்னிலும் பயிற்சியினை மேற்கொண்டார். 1998 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவில் இரண்டாவது பழமையானதும் தெற்கு அவுஸ்திரேலியாவில் 1838 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட பழமையானதுமான சட்ட நிறுவனமான நொக்ஸ் மற்றும் ஹாக்ரேவ் சட்டத்தரணிகள் அமைப்பில் குடிவரவு மற்றும் வர்த்தக சட்டப்பிரிவில் இணைந்துகொண்டார். 


இலங்கையிலிருந்து புலம்பெயர்வோரின் அதிகரித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் முகமாக ஃபெயார்.ஃபீல்ட் சட்டத்தரணிகள் 2005 ஆம் ஆண்டு இலங்கையில் அவுஸ்திரேலியா கேட்வே அலுவலகமொன்றை ஸ்தாபித்தனர். அது ஜெய்க் ஹில்டன் கோபுரத்தில் இயங்குகிறது. தொழில்திறனுடையவர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்வதற்கான நம்பகமான சேவைகளை திறமையான சட்டவல்லுனர்கள் மூலமாக உதவி வருகிறது. 

இலங்கையர்களுக்கு உதவுவதன் மூலமாக அவுஸ்திரேலியா கேட்வே அமைப்பு கொழும்பில் உள்ள பிரசித்திபெற்ற குடிவரவு ஆலோசனை முகவர் அமைப்பாக திகழ்வதற்கு திரு.கட்டுகம்பல வழிவகுத்தார். அவுஸ்திரேலியாவுடனான முதல்தர குடிவரவு நேச நாடு என்ற வகையில் இலங்கையில் இருந்து பல தொழில்வாண்மையாளர்களும் வர்த்தகர்களும் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயரும் போக்கினை நாம் கொண்டுள்ளோம். ஆகவே பொதுமக்களுக்கு சரியான தகவல்களை பெற்றுக்கொடுக்க வேண்டியது மிக முக்கியமானது. இது விடயத்தில் பல தவறான அபிப்பிராயங்கள் உள்ளமை பற்றியும் அறிவுறுத்த வேண்டும். குடிபெயர்வு விடயத்தில் பெரும்பாலான இலங்கையர்களுக்கு சரியான தகவலைப் பெற்றுக்கொள்வதில் வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன என்றும் திரு.கடுகம்பல தெரிவித்தார். 

இலங்iயில் இருந்து பொறியிலாளர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் கணக்காளர்கள் போன்ற தொழில்வாண்மையாளர்களுக்கு குடிவரவு மற்றும் தொழில்வாய்ப்புகள் காத்துள்ளன. அவுஸ்திரேலிய பட்டப்படிப்பும் இலங்கை அரச பல்கலைக்கழக பட்டப்படிப்பும் சமமானவை என்பதால் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தொழிவாய்ப்பைப் பெறுவதற்கும் குடியேறுவதற்கும் போதுமான தகைமைகள் உள்ளன. 

அவுஸ்திரேலியாவானது தரமான கல்வி மற்றும் சுகாதார முறைமைகளையும் கொண்டுள்ளதுடன் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட ஸ்திரத்தன்மையும் மிகுந்த ஒரு செல்வந்த நாடாகும். அதன் வலுவான பல்கலாசார தன்மையும் நேர வலயமும் ஆசியாவில் இருந்து அதுவும் விசேடமாக இலங்கையில் இருந்தும் குடியேறுவோரை கவரும் வகையில் அவுஸ்திரேலியாவை ஆகர்ஷித்துள்ளது. சிறந்த பொருளாதார செயற்பாடுகளைக் கொண்டிருந்ததால் உலக பொருளாதார மந்த நிலையில் இருந்து தவிர்;த்துக்கொண்ட சில செல்வந்த நாடுகளுள் அவுஸ்ரேலியாவும் ஒன்றாக விளங்குகின்றது. 

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கைப் புலம்பெயர் சமூகம் அவுஸ்ரேலியாவின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பு செய்துள்ளமையை பல வருடங்களாக அவுஸ்ரேலிய மக்கள் அங்கீகரி;த்துள்ளதுடன்  நன் மதிப்பும் வைத்துள்ளனர். திரு.கடுகம்பல சிறந்த சட்டத்தரணிகளுக்கான விருதை பல முறை பெற்றுள்ளவர் என்பது குறிப்படத்தக்கது. 

தொடர்புகளுக்கு 
Australia Gateway Pvt Ltd,
Suite 602 Hilton Residencies (Jaic Hilton) 200, Union Place Colombo 2, Sri Lanka
Tel : +694 112 300627 / 0717347670 / 0777347670
Fax : +94 115 755811
Email : admin@austriagateway.com
Twitter : FairfieldsLaw


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X