Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜனவரி 19 , மு.ப. 11:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முதல் தர இலத்திரனியல் வயர்கள் மற்றும் தொடர்பாடல்கள் வயர்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிறுவனமான களனி கேபிள்ஸ் பிஎல்சி, தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டமான :'களனி விசுர' பயிற்சிப்பட்டறையை திருகோணமலையில் முன்னெடுத்திருந்தது. இலத்திரனியல் கட்டமைப்புகளில் வயர்களை பதிப்பது தொடர்பான விளக்கங்களை தொழில்நுட்பவியலாளர்களுக்கு வழங்கும் வகையில் இந்த பயிற்சிப்பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இந்த பயிற்சிப்பட்டறை திருகோணமலை சாயா ப்ளு ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் போது வயர்களை பதிவு தொடர்பில் பின்பற்றப்படும் நவீன முறைகள் தொடர்பிலான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. களனி விசுர என்பது நாட்டின் வௌ;வேறு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட வண்ணமுள்ளது.
தனது சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்கு அமைவாக சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு முன்னதாக களனி விசுர திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு இலத்திரனியல் தொழில்நுட்பவியலாளர்களுக்கு நவீன பின்பற்றல் முறைகள் தொடர்பிலான விளக்கங்களை பெற்றுக் கொடுக்கும் வகையில் இந்த செயற்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
திருகோணமலை களனி விசுர திட்டம் என்பது தேசிய தொழில் தகைமைகள் அமைப்பின் நாடு முழுவதுக்குமான மதிப்பீட்டாளரான அனோபிரதீபன் இந்த திட்டங்களை முன்னெடுத்திருந்தார். இந்த பயிற்சிப்பட்டறைகளில் பங்குபற்றிய தொழில்நுட்பவியலாளர்கள், பாதுகாப்பான இல்லங்கள் மற்றும் கட்டடங்களுக்கு பொருத்தமான உறுதி செய்யப்பட்ட தரம் வாய்ந்த வயர்களை தெரிவு செய்வது, ப்ளக் பொயின்ட்கள் மற்றும் ஆளிகளை பொருத்தும் போது கவனிக்கப்பட வேண்டிய தூர இடைவெளிகள், விளக்குகளின் அளவுகளுக்கு பொருத்தமான வகையில் வயர்களை தெரிவு செய்தல், வயர்களை பதிதல் மற்றும் ஏனைய முக்கிய தொடர்புபட்ட விடயங்கள் பயிற்றுவிக்கப்பட்டிருந்தன.
இந்த முழு அளவிலான ஒரு நாள் பயிற்சிப்பட்டறைகளின் போது உணவு மற்றும் பான வகைகளும் பங்குபற்றுநர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், சான்றிதழ்களும், அன்பளிப்புகளும் பயிற்சிப்பட்டறையின் நிறைவின் போது வழங்கப்பட்டிருந்தன.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் மூலம் முன்னெடுக்கப்பட்டிருந்த 'களனி விசுர' திட்டத்தின் விசேட அம்சம் யாதெனில், ஒவ்வொரு பங்குபற்றுநர்களையும் வீடுகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு பொருத்தமான மின் வயர் பதிவு திட்டமொன்றை வரைவதை குறிக்கும் வகையில் அமைந்திருந்தன. இதன் மூலம் குறித்தவொரு இலத்திரனியலாளரும் போட்டிகரத்தன்மை வாய்ந்த துறையில் சமமான நிலைக்கு உயர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
களனி விசுர திட்டம் தற்போது முன்னணி பயிற்சிப்பட்டறையாக அமைந்துள்ளதுடன், நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியலாளர்களுக்கான சிறந்த பயிற்சிப்பட்டறையாக அமைந்துள்ளது. நாடு முழுவதையும் சேர்ந்த 16000 தொழில்நுட்பவியலாளர்களுக்கு இதுவரையில் பயிற்சிகளை வழங்கியுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலத்திரனியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறைகளை முன்னெடுத்திருந்ததன் மூலம் தேசத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளது.
களனி கேபிள்ஸ் பிஎல்சியின் வர்த்தக நாம அபிவிருத்தி முகாமையாளர் சன்ன ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், புதிய தலைமுறையைச் சேர்ந்த இலத்திரனியலாளர்களை கட்டியெழுப்புவதற்காக கம்பனி மேறகொள்ளும் முதலீடாக இந்த சமூகப் பொறுப்புணர்வு திட்டம் அமைந்துள்ளது என்றார்.
'கம்பனி உயர் தரம் வாய்ந்த வயர் வகைகளை உற்பத்தி செய்யும் வகையில் தனது தொனிப் பொருளான 'வயர் என்றால் களனி' என்பதற்கமைய, இந்த முறை நாம் திருகோணமலையை எமது களனி விசுர பயிற்சிப்பட்டறையை முன்னெடுப்பதற்காக தெரிவு செய்திருந்தோம். இதற்கு எம்மிடம் ஏற்புடைய காரணியும் காணப்படுகின்றது. தற்போது இந்த பிரதேசங்களில் அதிகளவில் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே இந்த திட்டங்களில் ஈடுபட்டுள்ள இலத்திரனியலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் முறையான அறிவை கொண்டிருக்க வேண்டும். களனி விசுர என்பது அவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அறிவை ஊட்டி அவர்களை சிறந்த முறையில் தயார்ப்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு நாடு முழுவதையும் சேர்ந்த இலத்திரனியலாளர்களிடமிருந்து சிறந்த வரவேற்பு காணப்படுகின்றமை, இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெறுவதற்கு சான்றாக அமைந்துள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
களனி கேபிள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும். சுமார் 44 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபிள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அண்மையில் நிறைவடைந்த SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபிள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.
களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன. தய்கி அகிமொடோ 5ளு விருதுகளின் தங்க விருதும் களனி கேபிள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் வழங்கலின் போது, பயிற்சிகள் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக களனி கேபிள்ஸ் பிஎல்சி 2013ஆம் ஆண்டில் தங்க விருதையும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .