2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு போர்ட் சிற்றி நிர்மாண பணிகள் இடைநிறுத்தம்

A.P.Mathan   / 2015 மார்ச் 10 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

துறைமுக மற்றும் கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்கமைவாக, கொழும்பு போர்ட் சிற்றியின் நிர்மாண பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சீனா கொமியுனிகேஷன் கம்பனி லிமிடெட் நிறுவனத்தின் இலங்கை அலுவலகமான CHEC அறிவித்துள்ளது.

குறித்த உத்தரவு பிறப்பிக்கட்ட அறிக்கையில், அரசாங்க அதிகாரிகளின் மூலமாக வழங்கப்பட்ட அனுமதிகள் மற்றும் அங்கிகாரங்களை சமர்ப்பிக்குமாறு CHEC போர்ட் சிற்றி கொழும்பு பிரைவேற் லிமிடெட் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளது. இந்த கோரப்பட்ட சகல ஆவணங்களையும் சமர்ப்பிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் கம்பனி மேற்கொண்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு கம்பனி முழு ஆதரவையும் வழங்கும் என்பதுடன், இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பின்பற்றி நடப்பதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. மேலும், சீனா கொமியுனிகேஷன் கொன்ஸ்ரக்ஷன் கம்பனி லிமிடெட் நாட்டின் சட்ட விதிமுறைகளை பின்பற்றி செயலாற்ற தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இது போன்ற பாரிய அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றவும் முன்வந்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X