Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனமானது நாடெங்குமுள்ள குறிக்கப்பட்ட புவியியல் பிரதேசங்களை கையாள்வதற்காக அண்மையில் முக்கியமான விநியோகஸ்தர்களை நியமித்ததன் மூலம், புதுமையான ஒரு விநியோக உபாயத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளது. இதன் விளைவாக, மேற்படி முக்கிய விநியோகஸ்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மீள் விற்பனையாளர்களுடன் நெருக்கமான தொடர்பை பேணுகின்ற அதேவேளையில் Acer மற்றும் Canon உற்பத்திகள் உறுதிமிக்க விதத்தில் அச் சந்தைக்கு சென்றடைவதையும் உறுதிப்படுத்துவார்கள்.
இப்பொழுதிலிருந்து, செல் மார்ட் (பிரைவேட்) லிமிட்டெட் கம்பஹா மாவட்டத்திற்கான விநியோக நடவடிக்கையை மேற்பார்வை செய்யும் அதேவேளை, கண்டி மாவட்டதிற்கான தேவைகளை ஜன்டொப் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனமானது வழங்கவுள்ளது.
மெட்ரோபொலிட்டன் கம்பியூட்டர்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரான சஞ்சீவ் அரியரத்னம் கூறுகையில், 'உண்மையிலேயே இது ஒரு புரட்சியாகும். அதுமட்டுமன்றி துரிதமான மற்றும் முறிவடையாத விநியோக வழிமுறையை உறுதிப்படுத்துவதற்கு மிகச் சிறந்ததொரு முறைமையும் ஆகும். உண்மையில் உள்நாட்டுச் சந்தையில் மிக விரைவாக விற்பனையாகும் 3 முன்னணி உற்பத்திகளுள் Acer மடிக்கணினிகள், Tablets மற்றும் மேசைக் கணினிகளும் உள்ளடங்குவதுடன், Acer புரஜெக்டர்கள் நான்காவது இடத்திற்கு நெருங்கி வந்துள்ளது. Canon உற்பத்தி தொடர்களைப் பொறுத்தமட்டில், இன்க்ஜெட் பிரின்டர்கள், லேசர் பிரின்டர்கள், ஸ்கேனர்கள் மற்றும் கமரா வகைகள் முன்னணியில் திகழ்கின்றன' என்று தெரிவித்தார்.
'இந்த விநியோக வழிமுறையை அங்குரார்ப்பணம் செய்வதையிட்டும் அதற்கு தலைமை வகிப்பதையிட்டும் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். இந்த முன்னெடுப்பின் மூலம் கூடுமானவரை மிகக் குறைந்த நேரத்திற்குள் மிகச் சிறந்த உற்பத்திப் பொருட்களை இலங்கை வாடிக்கையாளர்களுக்கு வழங்கக் கூடியதாக இருக்கும். இது தொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட பிரதிபலிப்பு கருத்துக்கள் மிகவும் சாதகமானவையாக காணப்பட்டன. எதிர்வரும் மாதங்களில் ஏனைய மாவட்டங்களுக்கும் விநியோகஸ்தர்களை நியமிப்பதற்கு நாம் திட்டமிட்டிருக்கின்றோம்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
'சந்தைக்கு புறம்பாகவும் விற்பனைக்கான மிக பெரிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்த சவாலை ஏற்றுக் கொள்வதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இது எமக்கு சாத்தியப்படக் கூடிய ஒரு வணிக முன்னெடுப்பாகவும் உள்ளது' என்று கம்பஹா, செல் மார்ட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளர் நளின் ஜயக்கொடி தெரிவித்தார்.
கம்பஹா நகரில் பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள, 74 ஊழியர்களின் பக்கபலத்துடன் இயங்கிவரும் செல் மார்ட் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனமானது 2003ஆம் ஆண்டிலிருந்து கையடக்கத் தொலைபேசி விநியோக தொழிற்றுறையில் வணிகத்தை மேற்கொண்டு வருவதுடன் தற்போது பல்வகைப்பட்ட பிரபலமான வர்த்தக குறியீடுகளிலான உற்பத்திகளை கையாள்கின்றது.
கட்டுகஸ்தோட்டை ஜன்டொப் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் பணிப்பாளரான ஜகத் பிரேமகுமார கூறுகையில், 'தங்களுடைய மாவட்டங்களிலுள்ள வாடிக்கையாளர்கள் மிகச் சிறந்த உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காகவும் சிறந்த பேரம்பேசல்களுக்காகவும் மிக நீண்ட தூரம் பயணித்து கொழும்புக்கு வரவேண்டிய அவசியம் இனிமேல் இல்லை. ஏனென்றால், அவ்வுற்பத்திகள் அனைத்தும் எமது மாவட்டங்களில் உள்ள மீள் விற்பனையாளர்களிடம் தற்போது கிடைக்கக் கூடியதாகவுள்ளது' என்றார்.
கட்டுகஸ்தோட்டை நகரில், கட்டுகஸ்தோட்டை வீதியில் அமைந்திருக்கும் ஜன்டொப் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம், விநியோகம்சார் வணிகத் துறையில் கடந்த பதினைந்து வருடங்களாக செயற்பட்டு வருகின்றது. 200 ஊழியர்களின் பக்கபலத்தைக் கொண்ட இந் நிறுவனம், இப்போது பிரபலமான பல உற்பத்தியாளர்களால் உற்பத்தி செய்யப்படும் அதிக எண்ணிக்கையிலான FMCG பொருட்களையும், அதுமட்டுமன்றி கையடக்க தொலைபேசிகளையும் விநியோகம் செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் ஐந்து தசாப்தங்களாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் மெட்ரோபொலிட்டன் குழுமமானது, இந்நாட்டின் மிக முன்னணி வணிக நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கின்ற அதேநேரம் தொழில்நுட்பம் மற்றும் வேலைத்தள தீர்வுகள் துறையில் முதன்னிலை நிறுவனமாகவும் உள்ளது. இன்று பல்வேறு பிரிவுகளிலான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் ஒரு பல்வகைமை நிறுவனமாக இது காணப்படுகின்றது. அந்தவகையில் புகைப்படக் கலை, தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பாடல், கணினி ஆகியவை முதற்கொண்டு சக்தி மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் வரை தனது வணிகத்தை விஸ்தரித்துள்ளது. ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்புபடுத்தியிருக்கும் பொதுவான விழுமியங்களால் நெறிப்படுத்தப்படும் அடிப்படையில், வாடிக்கையாளர் சேவையில் சிறப்புத்துவத்தை நோக்கி முன்னோக்கி செல்வதே நிறுவனத்தின் பிரதான நோக்காகும். மிகச் சிறந்த சேவை மற்றும் வாடிக்கையாளர் கவனிப்பு ஆகியவற்றுக்காகவும் இலத்திரனியல் கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து சூழலை பாதுகாப்பதற்காக எடுக்கின்ற நடவடிக்கைகளுக்காகவும் மெட்ரோபொலிட்டன் குழுமம் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கின்றது. தன்னுடைய மனித வளங்களே நிறுவனத்தின் பலம் மற்றும் இயங்காற்றலுக்கான அடிப்படை ஆதரமாக இருக்கின்றது என்று மெட்ரோபொலிட்டன் நிறுவனம் நம்புகின்றது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago