2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

புதிய உச்சத்தை அடைந்துள்ள E-tel

George   / 2015 ஜூன் 11 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில்  புதுவகை ஸ்மார்ட் போனை E-tel  நிறுவனம்  அறிமுகம் செய்துள்ளது. உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைபேசிகள் மிகவும் விலை கூடியவை என்ற மாயையை வியக்கத்தக்க வகையில் முறியடிக்கும் வகையில் இந்த  புதிய  ஸ்மார்ட் போனின் அறிமுகம் அமைந்துள்ளது.

முழு அளவிலான HD ஒக்டா  கோர் செயற்பாட்டு சக்தி கொண்ட இந்த புதிய போன் ‘curiosity L2’  என்பதாகும். நியாயமான விலையில் கிடைக்ககூடிய மிகச் சிறந்த ஸ்மார்ட் போன் வகையாக இது அமைந்துள்ளது.

நாட்டின் முன்னோடி நடமாடும் தொலைதொடர்பு சேவை நிறுவனமான எடிசலாட் நிறுவனத்துடன் இணைந்து இது அறிமுகம் செய்யப்படுகின்றது.

நாட்டின் தற்போதைய நடமாடும் அலைபேசி  சந்தையில் காணப்படும் மிகவும் விலை கூடிய அலைபேசிகளின் செயற்பாட்டுக்கு முற்றாக ஈடுகொடுக்கும் வகையில்  இந்த புதிய அலைபேசியின் பண்புகள் அமைந்துள்ளன. ஆனால், இதன் விலை ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் நான்கில் ஒரு பங்காகவே உள்ளது.

இதன் மூலம்  அதி நவீன வசதிகள் கொண்ட  அலைபேசிகள் பெரும்பாலானவர்களை சென்றடைய வழியமைக்கப்பட்டுள்ளது என்று இதன் இறக்குமதியாளர்களான brantel  நிறுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஐசபர் மீடியா றிசர்ச் (CMR)   என்ற சந்தை புலனாய்வு மற்றும் ஆலோசனை சேவை நிறுவனம் நடத்தியுள்ள சுயாதீன மதிப்பீடுகளின் பிரகாரம் ஸ்மார்ட்போன் மற்றும் ஏனைய போன்கள்  என உள்ளூர் சந்தையில் காணப்படும் அலைபேசி வகைகளின் இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடத்துக்குள்ளும் தன்னை நிலைநிறுத்தியுள்ள ஒரேயொரு வகை  அலைபேசியாக காணப்படுவது e-tel மட்டுமேயாகும்.

இது பற்றி கருத்து வெளியிட்ட எடிசலாட் லங்கா நிறுவனத்தின் பிரதம வர்த்தக அதிகார் ஜனக்க ஜயலத், 
' இலங்கை முழுவதும் எமது நிலையங்கள் ஊடாக  நாம் விநியோகித்து வரும் பல்வேறு வகையான அலைபேசிகளுடன் e-tel மூலம் அறிமுகமாகும் இந்த புதிய ஸ்மார்ட்போனையும் எம்மோடு இணைத்துக்கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம்.

நவீன தொழில்நுட்பங்களை விரைந்து ஏற்றுக்கொண்டு அவை மக்களை சென்றடைய வழிவகுப்பதில் e-tel  அனுகுமுறை எடிசலாட்டின் பணியான ‘to extend people’s reach’  என்ற (மக்களுக்கு எட்டக்கூடிய வகையில் விரிவாக்கம் செய்தல்) தொனிப்பொருளுக்கும் ஸ்மார்ட் போன்களுக்கான சிறந்த வலையமைப்பாக இருக்க வேண்டும் என்ற கருப்பொருளுக்கும் இசைவாக இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாகும்'என்றார்.

brantel நிறுவனத்தின் பிரதம நிரைவேற்று அதிகாரி பிஷரி லத்தீப் இது பற்றி குறிப்பிடுகையில்.
curiosity L2அதன் பொதி முறை, நவீன பண்புகள், செயற்பாடு, வடிவமைப்பு, அழகு, உள்ளூர் நிலைமைகளுக்கு ஈடுகொடுக்கும் இயல்பு, உள்ளூர் மக்களின் பணப்பையுடன்  ஒத்துப்போகும் இயல்பு என எல்லாவகையிலும்  brantel இன் தத்துவத்தோடு இசைந்து போவதாகவே அமைந்துள்ளது. 

இலங்கை சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட முதலாவது ஒக்டாகொர் ஸ்;மார்ட்போன் ந-வநட உரசழைளவைல09 ஆகும்.கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு முன் அது அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. உரசழைளவைல டு2 அதன் காட்சி தெளிவு, நினைவாற்றல் கெமரா மற்றும் ஏனைய பண்புகளை பொறுத்தமட்டில் மிகவும் முன்னேற்றகரமான ஒரு கையடக்க தொலைபேசியாகும்'என்று கூறினார்.

1.4பாண ஒக்டாகோர் செயற்பாட்டு சக்தி கொண்ட இந்த அலைபேசி அன்ட்ரொயிட் 4.4 கிட்கெட் செயற்பாட்டு முறையினால் செயற்படுகின்றது.மெல்லிய அழகிய நவீன வடிவிலான இந்த அலைபேசிகள் வெள்ளை மற்றும் மங்கிய தங்க நிறத்தில் கிடைக்கின்றன. மிக நவீன செம்மையாக்கல் வடிவமைப்புகளுடன் முழு அளவிலான HD ஐந்து அங்குல 16.7 மில்லியன் வர்ணம் கொண்ட amoled  திரை அமைப்புடன் காணப்படுகின்றது.

இதன் பின் பக்க கெமரா 13 மெகாபிக்ஷல் auto focus CMOS உணர்வு முறை மற்றும் பிளாஷ;என்பவற்றை கொண்டது.முன் பக்க கெமரா ஐந்து மெகா பிக்ஷல் கொண்டது.அத்தோடு முக அழகு பண்புகள் மற்றும் இரட்டை மைக்ரோபோன்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இரட்டை சிம் வசதி கொண்ட இந்த தொலைபேசிகள் hspa wifi/wifi hotpot 2gb 16gb rom 32gb வெளி நினைவாற்றல் பிரிவு 32படி உள்ளக நினைவாற்றல் என்பவற்றையும்  கொண்டதாகும். வீடியோ மற்றும் ஸ்கைப் தொலைதொடர்பு வசதிகள் உட்பட வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் திருப்தி என்பவற்றை வழங்கக்கூடிய சகல பண்புகளையும் கொண்டுள்ளன.
e-tel  curiosity  இன் சந்தை விலை 29,900 ரூபாயாகும்.1750 ரூபா பெறுமதியான இலவச பாதுகாப்பு உறையொன்று வழங்கப்படுகின்றது.

எடிசலாட் காட்சியறைகளுக்கு அப்பால் இலங்கை முழுவதும் உள்ள சுமார் இரண்டாயிரம் e-tel  காட்சியறைகள் ஊடாகவும் சில்லறையாக விற்கப்படும்.அத்தோடு கொழும்பு , அநுராதபுரம் ,கண்டி ,மாத்தறை,நீர்கொழும்பு,யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள brantel  சேவை நிலையங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.

e-tel போன்கள் பெங்கொக்கில் வடிவமைக்கப்பட்டு சீனாவில் உள்ள உலக தரம் வாய்ந்த  மூன்று  உற்பத்தி நிலையங்களில் அவை தயாரிக்கப்படுகின்றன. இவை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அலைபேசிகளை உற்பத்தி செய்யும் உலகத்தரம் வாய்ந்த பத்து முக்கிய உற்பத்தி நிலையங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள உற்பத்தி நிலையங்களாகும்.அந்த நாடுகளுக்கான அதே உற்பத்தித் தரங்களைப் பேணிதான் இங்கு எல்லா உற்பத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பபட்ட விண் ஓடத்தை தொடர்ந்து curiosity  என பெயரிடப்பட்ட போன் வகைகள் i2, i4, i4c, i6 மற்றும் i7 தொடர்கள் தற்போது விற்பனையில் உள்ளன.2014 மார்ச்சில் curiosity  N3 அறிமுகம் செய்யப்பட்டது. 2014 ஜூலையில் பிற்பகுதியில் ஒக்டா கோர் curiosity 09  அறிமுகமானது.இவ்வாண்டு மார்ச் மாதத்தில் curiosity N4 இரட்டை புதுமை அறிமுகமானது. தற்போது curiosity L2 அறிமுகமாகியுள்ளது.

2004முதல் இலங்கையில் செயற்பட்டு வருகின்ற brantel 2008இல் e-tel  வர்த்தக முத்திரையை அறிமுகம் செய்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X