Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஜூன் 18 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
iDealz Lanka ஸ்தாபனத்தின் அஹமட் ரிஸ்வி ரிஃவ்கான் முதலாவது Huawei-சிங்கர் விற்பனை பங்காளர் விருதுகள் வழங்கும் வைபவத்தில், சிறந்த விற்பனை பங்காளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். இந்த விருதுகள் வழங்கும் வைபவம் அண்மையில் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் கோலாகலமாக இடம்பெற்றது.
'You are the One' எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தின் போது, நாடு முழுவதையும் சேர்ந்த 1500க்கும் அதிகமான விற்பனை பங்காளர்களிலிருந்து சிறந்த 10 விற்பனைப் பங்காளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கான கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. தமக்குரிய விருதை சிங்கர் ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸிடமிருந்து ரிஃவ்கான் பெற்றுக் கொண்டார். இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிங்கர் மற்றும் Huawei ஸ்தாபனங்களின் பெருமளவான உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
2011ஆம் ஆண்டு தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த iDealz லங்கா, நாட்டின் முன்னணி மொபைல் விற்பனையகங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இந்த விருதை பெற்றுக் கொண்ட ரிஃவ்கான் கருத்து தெரிவிக்கையில், 'சிங்கர் மற்றும் Huawei ஆகியன iDealz லங்காவின் அர்ப்பணிப்பான மற்றும் கடுமையான உழைப்பை கௌரவித்துள்ளதை நான் வரவேற்கிறேன். Huawei தெரிவுகளின் விற்பனை பங்காளராக நாம் பெருமளவு ஊக்குவிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறோம். Huawei வர்த்தக நாமத்தின் விஸ்தரிப்புக்கு நாம் வழங்கும் பங்களிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த விருது அமைந்துள்ளது' என்றார்.
2014 நிதியாண்டில் விற்பனை பெறுபேறுகள், வர்த்தக நாமத்துக்கான உண்மைத்தன்மை மற்றும் பங்காண்மை போன்ற விடயங்கள் இந்த விருதுக்காக தெரிவு செய்யும் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தன.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகளவு விற்பனைகளை மேற்கொண்ட நபராகவும் ரிஃவ்கான் தெரிவாகி, 'மாபெரும் பரிசு வெற்றியாளர்' எனும் நிலைக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவரின் பிரத்தியேக அர்ப்பணிப்பான செயற்பாட்டுக்காக சிங்கர் ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸிடமிருந்து புத்தம் புதிய கார் ஒன்றையும் பரிசாக பெற்றுக் கொண்டார்.
சிங்கர் ஸ்ரீ லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து தெரிவிக்கையில், 'எமது பங்காண்மைக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் எமது விநியோக பங்காளர்கள் செயலாற்றி வருகின்றனர்' என்றார்.
தமது புகழுக்கும், கடின உழைப்புக்கும் பக்க பலமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்கின்றமைக்காக இறைவனுக்கு நன்றியை தெரிவித்த ரிஃவ்கான், 'இந்த குறுகிய காலப்பகுதியில் உயர்ந்த ஸ்தானத்தை பெற்றுக் கொள்வதற்கு கம்பனியில் பணியாற்றும் சக ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்;ததாக அமைந்திருந்தது. நாம் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்குகிறோம், சாதாரண விடயங்களை நட்புறவான முறையில் நாம் மேற்கொள்வதன் பிரதிபலிப்பாக மக்கள் மீண்டும் மீண்டும் எம்மை நாடி வருகின்றனர், எமது வெற்றிக்கு இது மிகவும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது' என்றார்.
Huawei, Samsung மற்றும் மைக்குரோசொஃப்ட் (நொகியா) வர்த்தக நாமங்களுக்கு 1ல் தர விற்பனை பங்காளராக திகழும் iDealz லங்கா, எதிர்வரும் காலங்களில் தமது கிளை வலையமைப்பை கொழும்புக்கு வெளியில் அமைந்த நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது. மேலும் தற்போது நாடு முழுவதும் தனது விநியோக சேவையை 24 மணி நேர காலப்பகுதியினுள் மேற்கொண்டு வருகிறது.
வேகமாக வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்து வரும் iDealz லங்கா, தொடர்ச்;சியாக சிறந்த, நவீன கையடக்க தொலைபேசிகளை வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்பாடல் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையில் வழங்குவதை தனது நோக்கமாக கொண்டுள்ளது.
3 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago