2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நெலும் பொக்குண மாவத்தையில் 'கலா பொல 2015' கண்காட்சி

A.P.Mathan   / 2015 ஜனவரி 13 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் சர்வதேச புகழ்பெற்ற திறந்தவெளி ஓவியக் கண்காட்சியான 'கலா பொல' எதிர்வரும் ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை கொழும்பு, நெலும் பொக்குண மாவத்தையில் இடம்பெறவுள்ளது. ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் ஒன்றிணைந்து ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் வழங்கப்பட்டு வரும் 'கலா பொல 2015' கண்;காட்சியானது, அன்றைய தினம் முற்பகல் 8.00 மணிக்கு ஆரம்பமாவதுடன் அதேநாள் இரவு 9.00 மணி வரையும் இடைவிடாது தொடர்ச்சியாக 13 மணித்தியாலங்கள் இடம்பெறும். 

கொழும்பு நகரானது வர்ணமயமான மாயத் தோற்றத்துடன் ஜொலிக்கையில், அங்கு நடைபெறும் இவ்வருட 'கலா பொல' கண்காட்சி கடந்த காலங்களைப் போலவே நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை தம்பக்கம் கவர்ந்திழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் இடம்பெறும் புகழ்பெற்ற 'மொன்மார்ட்ரே' போன்ற ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பெருமளவிலான கோடைக்கால திறந்தவெளி ஓவியக் கண்காட்சிகளினால் ஏற்பட்ட உணர்வுத் தூண்டுதலின் காரணமாக உருவான இலங்கையின் 'கலா பொல' கண்காட்சி, கடந்த பல வருடங்களாக வளமிக்க ஒரு கலாசார நிகழ்வாக மாற்றமடைந்திருக்கின்றது. அதுமட்டுமன்றி, கொழும்பின் வருடாந்த கலாசார நாட்காட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் மற்றும் தவறவிடப்பட முடியாத ஒரு நிகழ்வாகவும் இன்று காணப்படுகின்றது. 

1993ஆம் ஆண்டு தொடக்கம் ஜோர்ஜ் கீற் மன்றத்தினால் வழங்கப்பட்டு வரும் 'கலா பொல' கண்காட்சியானது, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பெருந்தன்மையுள்ள ஆதரவு மற்றும் பெறுமதிமிக்க பங்காளித்துவம் ஆகியவற்றை கடந்த 22 வருடங்களாக தொடர்ந்தும் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கையின் கலை மற்றும் கலாசாரத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் ஊக்குவித்தலுக்கு ஆதரவு வழங்குவதற்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மை பொறுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்படி ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.   

'கடந்த இரு தசாப்த காலமாக இலங்கையின் பொதுமக்களிடையே ஓவியம் தொடர்பிலான சிறப்பான மதிப்பினை அதிகரிப்பதற்கான வெற்றிகரமான ஒரு வினையூக்கியாக தவிர்க்க முடியாததொரு வகிபாகத்தை 'கலா பொல' கொண்டுள்ளது' என்று ஜோர்ஜ் கீற் மன்றத்தின் தலைவரான செட்றிக் டி சில்வா தெரிவித்தார். 

'இதில் கலந்து கொள்ளும் ஓவியர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கின்றது. இவ்வருடம் மேலும் அதிக அளவிலான ஓவியக் கலைஞர்களும் பார்வையாளர்களும் ஒன்றுதிரள்வார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். 'கலா பொல' கண்காட்சியானது சிறந்த ஓவியத்தை உருவாக்குவதையும் அதற்கு மதிப்பு அளிப்பதையும் ஊக்குவிப்பது மட்டுமன்றி, தமது ஓவியங்களை காட்சிப்படுத்துபவர்களுக்கு இலாபமளிக்கின்ற வருமான மார்க்கமாகவும் 'கலா பொல' அமைகின்றது. இந்த இரு தசாப்த காலப்பகுதியிலும் இம் முயற்சிக்கு பெறுமதிமிக்க ஆதரவை வழங்கியமைக்காகவும் எமக்கு மிகப் பெரிய பக்கபலமாக செயற்பட்டமைக்காகவும் ஜோன் கீல்ஸ் குழுமத்திற்கு நாம் மீண்டும் ஒரு முறை  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்' என்றும் டி சில்வா மேலும் குறிப்பிட்டார். 

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட தலைமை அதிகாரி செல்வி. நதீஜா தம்பையா கருத்துத் தெரிவிக்கையில், 'கலைஞர்களும் சமூதாயமும் கலா பொல கண்காட்சியில் இருந்து பெற்றுக்கொண்ட அனுகூலமானது 'நாளைய நாளுக்காக தேசத்திற்கு வலுவூட்டுதல்' எனும் ஜோன் கீல்ஸ் மன்றத்தின் தூரநோக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் தமது தொழில்சார் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கும், கட்டி எழுப்புவதற்குமான மிக முக்கியமானதொரு தளமேடையாக 'கலா பொல' காணப்படுகின்றது. ஸ்திரமான ஒரு வாடிக்கையாளர் தொகுதிக்கு அவர்கள் தமது கைவண்ணங்களை காட்சிப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்துவதற்குமான தளமேடை ஒன்றை இது உருவாக்குவது மட்டுமன்றி, இலாபம் தரவல்ல மற்றும் தொழில்சார் வழிமுறையாக கலைத்துறையை  முன்னெடுப்பதற்கும் ஊக்கமளிக்கின்றது. அந்த வகையில் 'கலா பொல' கண்காட்சியானது தேசிய மட்டத்தில் பெருமளவான கலைஞர்களை உருவாக்கியுள்ளது. மேலும் சிலர் சர்வதேச அரங்கிலும் மிளிர்கின்றனர். இக் கண்காட்சி ஓவியர்கள் பரஸ்பரம் கற்றறிந்து கொள்வதற்கும் வசதியளிக்கின்ற அதேவேளை உள்நாட்டு கலையை ஊக்குவிப்பதற்கு சமூகத்திற்கு மிகப் பெரிய சந்தர்ப்பத்தையும் அளிக்கின்றது. அதனூடாக இலங்கையரின் ஓவியத்தில் பல்வகையான கலைநயம், பாணி போன்றவற்றை விருத்திசெய்து மேம்படுத்திக் கொள்ள வழி கிடைக்கின்றது. மிகவும் எளிமையான முறையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட 'கலா பொல' கண்காட்சி இன்று சர்வதேச நிகழ்வாக மாறியுள்ளது. மேலும் அதிகளவான அசல் ஓவியங்கள் இலங்கை மற்றும் வெளிநாடுகளிலுள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களின் சுவர்களை அலங்கரிப்பதை காணும்போது நாம் மகிழ்ச்சியடைகின்றோம்' என்றார்.

ஜோன் கீல்ஸ் மன்றமானது இலங்கையின் முதலாவது டிஜிட்டல் 'ஆர்ட் கலரி' இனை (www.srilankanartgallery.com) தொடர்ச்சியாக நடாத்தவிருக்கின்றது. இதன்மூலம் இலங்கைக் கலைஞர்கள் தமது கலைப் படைப்புக்களை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்களுக்கு வருடம் முழுவதும் காட்சிப்படுத்துவதற்கும் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்கின்றது. இதேவேளை, 'ஸ்ரீலங்கன் ஆர்ட் கலரி' எனும் பிரதான இணையத்தளம் John Keells Art Gallery இனையும் நடாத்தி வருகின்றது. தமது துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களான இதன் காப்பாளர் குழுவினரால் தெரிவுசெய்யப்பட்ட ஓவியங்களை இது கொண்டுள்ளது. இந்த 'காப்பளிக்கப்பட்ட  இணையத்தளம்' ஸ்ரீலங்கன் ஆர்ட் கலரியில் பதிவுசெய்துள்ள கலைஞர்களுக்கு பேரார்வமிக்க மூலதத்துவங்களை வழங்குகின்றது. இதன்மூலம் அவர்கள் தமது சொந்த அபிவிருத்தி மற்றும் வளர்ச்சியை கருத்திற்கொண்டு, 'காப்பளிக்கப்பட்ட தெரிவுகளுக்கு' எதிராக தமது படைப்புக்களுக்கு ஒப்பீட்டுக் குறியிடலை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். 

கடந்த வருடங்களைப் போலவே 'கலா பொல 2015' கண்காட்சியையும் கட்டணங்கள் எதுவுமின்றி இலவசமாகப் பார்வையிட முடியும் என்பதுடன், பொதுமக்களுக்காக அது திறந்து வைக்கப்பட்டிருக்கும். சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கும் மிக முக்கிய விடயமாக திகழ்கின்ற இக் கண்காட்சியானது – இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஜனவரி 25ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை தம்பக்கம் கவர்ந்திழுக்கும். 'கலா பொல' கண்காட்சியின் நல்லியல்பான, நட்புணர்ச்சிமிக்க மற்றும் கலாசார களிப்பூட்டல்; நிறைந்த சூழலை அனுபவித்து மகிழ்வதுடன், இலங்கையின் தலைநகர் கொழும்பின் மையப்பகுதியில் நடைபெறும் இந்த மனமகிழ்ச்சி தருகின்ற கோடைக்கால ஓவியக் கண்காட்சி தொடர்பாக ஒருவரிலிருந்து-மற்றொருவருக்கு பரவுகின்ற சுகமான உணர்வையும் அவர்கள் அனுபவித்து மகிழ்வார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X