.jpg)
கொழும்பு பங்குச்சந்தையின் S&P SL 20 சுட்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து முதல் தடவையாக 4000 புள்ளிகளை நேற்றைய தினம் கடந்திருந்தது. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த இந்த சுட்டி, நடப்பு ஆண்டின் செப்டெம்பர் 11 ஆம் திகதி வரை 23 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
வெளிப்படையானதும், தொடர்ச்சியானதுமான பெறுபேறுகளை முதலீட்டாளர்களுக்கு வழங்கும் வகையில் சர்வதேச தரங்களுக்கு அமைவாக இந்த சுட்டி தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சுட்டியில் அடங்கியுள்ள நிறுவனங்கள், எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி, ஏசியன் ஹோட்டல்ஸ் அன்ட் புரொப்பர்டீஸ் பிஎல்சி, புக்கிட் தாரா பிஎல்சி, சிரி ஹோல்டிங்ஸ் பிஎல்சி, கார்கில்ஸ் சிலோன் பிஎல்சி, கார்சன்ஸ் கம்பர்பெட்ச் பிஎல்சி, சிலோன் டொபாக்கோ கம்பனி பிஎல்சி, செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் பிஎல்சி, கொமர்ஷல் வங்கி பிஎல்சி, டிஎஃவ்சிசி வங்கி, டயலொக் ஆக்சியாடா பிஎல்சி, டிஸ்டிலரீஸ் கம்பனி பிஎல்சி, ஹற்றன் நஷனல் வங்கி பிஎல்சி, ஹேலீஸ் பிஎல்சி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, லங்கா ஒரிக்ஸ் லீசிங் பிஎல்சி, லயன் பிரெவரி சிலோன் பிஎல்சி, நஷனல் டிவலப்மன்ட் வங்கி பிஎல்சி, நெஸ்லே லங்கா பிஎல்சி மற்றும் சம்பத் வங்கி பிஎல்சி.