.jpg)
மூன்று ஆண்டுகளின் பின்னர் கொழும்பு பங்குச்சந்தை 7,000 புள்ளிகள் எனும் இலக்கை கடந்துள்ளது. குறைவான வட்டி வீதங்களின் காரணமாக கொழும்பு பங்குச் சந்தையின் மீதான நாட்டம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவு காணப்படுவதாகவும், ஆனாலும், மதிப்புக்குறைந்த பங்குகளின் மீது அதிகளவான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றமையால், இந்த ஆண்டில் கொழும்பு பங்குச்சந்தை பதிவு செய்து வரும் உயர்வான பெறுமதிகளில் சரிவு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் பங்குச்சந்தை முகவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியை தொடர்ந்து, நேற்றைய தினம் கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் நிறைவடையும் பொழுது, அ.ப.வி.சு 7004.75 எனும் உயர்வான பெறுமதியை பதிவு செய்திருந்தது. குறிப்பாக தப்ரோபேன் ஹோல்டிங்ஸ் பங்குகளின் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த மொத்த பங்கு கைமாறல்கள் குறித்து பங்கு முகவர்கள் அச்சம் நிறைந்த கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.
புரள்வு பெறுமதி 1.47 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்களின் முதலீடு 88.1 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.