Lenin Raj / 2026 மார்ச் 13 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு இந்தச் செயலி ஒரு வரப்பிரசாதமாகும். வினாக்கள் புரியாத சந்தர்ப்பங்களில் பயனாளர்கள் தமது தாய்மொழியைப் பயன்படுத்தும் வசதி இதில் உள்ளது. இருப்பினும், கற்றல் செயல்பாட்டின் போது பதில்களை ஆங்கிலத்தில் வழங்குவதை இது ஊக்குவிப்பதன் மூலம், பயனாளர்களின் ஈடுபாட்டை இது உறுதி செய்கிறது.
விறுவிறுப்பான காணொளிகள், அனிமேஷன்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய கதாபாத்திரங்கள் ஊடாக கற்றல் அனுபவம் மெருகூட்டப்பட்டுள்ளது. அத்துடன், புள்ளிகள் வழங்கும் முறை மற்றும் முன்னிலை வரிசைப்பட்டியல் (Leaderboards) போன்ற அம்சங்கள் பயனாளர்களை ஆர்வத்துடன் கற்கத் தூண்டுகின்றன.
Selvern Trust இன் ஸ்தாபக தவிசாளர் விஜேந்திரன் வொட்சன் இது குறித்துக் கூறுகையில்,
"இளம் தொழில்வல்லுநர்களின் வெற்றிக்கு ஆங்கிலம் ஒரு தடையாக இருப்பதை நாம் அவதானித்தோம். மாணவர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில், நடைமுறைக்கு சாத்தியமான தீர்வாக இந்த 'SELVE' செயலியை உருவாக்கியுள்ளோம். ஏற்கனவே 200-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் இதன் மூலம் தமது முன்னேற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்," என்றார்.
இந்தச் செயலி Artin (Pvt) Ltd, Perfectus (Pvt) Ltd மற்றும் Rainbow Institute ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது. 2026 மார்ச் மாதத்தில் இலவசப் பரீட்சார்த்தக் காலத்தை (Free Trial) வழங்கும் SELVE, எதிர் வரும் காலங்களில் AI மூலம் பல்வேறு தொழில்சார் பாத்திரங்களை ஏற்று பயிற்சி அளிக்கும் வசதியையும் விரிவுபடுத்தவுள்ளது.
தற்போது இச்செயலியை App Store மற்றும் Google Play தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago