Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜனவரி 19 , மு.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
AIA இன்ஷுவரன்ஸ் AIA ‘ரியல் ரிவோட்ஸ்’ (AIA Real Rewards) வெகுமதித் திட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கான வெகுமதிகளைப் புதியதொரு நிலைக்குக் கொண்டு செல்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
மிகச்சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தின் மிகவும் உயர்வானதொரு நிலையில், AIA நிறுவனத்தை நிலைநிறுத்துவதற்காக, வருடத்துக்கு 7,000 க்கும் அதிகமான வெற்றியாளர்களுடன் இவ்வெகுமதித் திட்டமானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் அதிகமான நன்மைகளை வழங்கவுள்ளது.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட ‘ரியல் ரிவோட்ஸ்’ வெகுமதித் திட்டமானது, வெற்றியாளர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பொன்றை ஏற்படுத்தவுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாதமும் 600 க்கும் அதிகமான AIA வாடிக்கையாளர்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பொன்றைப் பெறுவார்கள். மேலதிகமான 15 அதிர்ஷ்ட வெற்றியாளர்கள் வருடாந்த, பிரமாண்டப் பரிசுக் குலுக்கலில் இருந்து தெரிவு செய்யப்படுவார்கள்.
இது காப்புறுதித் துறையில் உள்ள இணையற்றதொரு வெகுமதித் திட்டமாகும். மிகவும் பிரமாண்டமான பரிசுகளாக, மெல்பேர்ன் மற்றும் பாலி ஆகிய இடங்களுக்குப் பயணங்களை மேற்கொள்வதற்கான (இருவருக்கான) விடுமுறைப் பொதிகள், ரூ. 25,000 பெறுமதியான சூப்பர் மார்க்கட் வவுச்சர்கள் ஆகியவற்றை இது உள்ளடக்குவதோடு, மாதாந்தப் பரிசுகளாக, பாங்கொக்குக்கான (இருவருக்கான) விடுமுறைப் பொதிகள், டெப்கள் (tabs), திறன்பேசிகள் (smart-phones) மற்றும் கைபேசி மீள்நிரப்பல்கள் ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது.
AIA நிறுவனத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர், கெலும் சேனநாயக்க AIA இனது வாடிக்கையாளர்களுக்கு அதனது அர்ப்பணிப்புகளை வலியுறுத்திக் கருத்துத் தெரிவிக்கையில், “AIA இன் ‘ரியல் ரிவோட்ஸ்’ தற்போது அதனது மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.
மேலும், இது முன்பிருந்ததை விடத் தற்போது மிகவும் பெரியளவிலும் மிகச்சிறந்ததாகவும் அமைந்துள்ளது. AIA நிறுவனத்தில், அதிசிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்காக நாங்கள் முன்னுரிமை வழங்கியுள்ளோம்.
மேலும், வாடிக்கையாளர்களின் விசுவாசத்துக்கும் மற்றும் அவர்களின் ஆதரவுக்கும் வெகுமதி அளிப்பதற்கான வழிகளிலேயே தொடர்ச்சியாக எங்களுடைய அவதானத்தைச் செலுத்துவோம். ‘ரியல் ரிவோட்ஸ்’ வெகுமதித் திட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் இலகுவானதாகும்.
இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீங்கள், AIA வாடிக்கையாளர் ஒருவராக இருந்து, உங்களுடைய கட்டுப்பணங்களை உரிய நேரத்துக்குச் செலுத்துவதாகும். நீங்கள் உங்களுடைய கட்டுப்பணங்களை வருடாந்தமாகவோ அல்லது நிலையான கட்டளை ஊடாகவோ செலுத்தும் போது, உங்களது வெற்றி வாய்ப்புகள் மென்மேலும் அதிகரிக்கும்.’ எனத் தெரிவித்திருந்தார்.
9 hours ago
23 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
23 Jul 2025